பிரபல நடிகை வளர்ப்புத் தந்தை மீது பாலியல் புகார்! - Tamil News tamildiscovery Jaffna news Yarl news
Headlines News :
Home » » பிரபல நடிகை வளர்ப்புத் தந்தை மீது பாலியல் புகார்!

பிரபல நடிகை வளர்ப்புத் தந்தை மீது பாலியல் புகார்!

Written By NIsha on Tuesday, August 20, 2013 | 10:23 PM

சாய்சிரிஷா தெலுங்கில் பிரபல நடிகையாக உள்ளார். ‘லவ் அட் டாக்’ என்ற படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

மேலும் பல புது படங்களிலும் ஒப்பந்தமாகியுள்ளார். இவரது தந்தை பிரசாத் ராவ் கார் சாரதியாக உள்ளார்.

இரு மாதங்களுக்கு சாய்சிரிஷா திடீரென்று வீட்டில் இருந்து மாயமானார். இதுகுறித்து பிரசாத்ராவ் பஞ்சாரா ஹில்ஸ் பொலிசில் புகார் செய்தார். எனது மகள் படப்பிடிப்புக்காக வெளியே சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கண்டு பிடிக்க முடிய வில்லை. கையடக்கத் தொலைபேசியும் சுவிட்ச்ஆப் செய்யப்பட்டு உள்ளது என்று குறிப்பிட்டு உள்ளார்.

பொலிசார் வழக்குப்பதிவு செய்து சாய் சிரிஷாவை தேடி வந்தனர்.

இந்த நிலையில் சாய்சிரிஷா தெலுங்கு தொலைக்காட்சி அலைவரிவை ஒன்றுக்கு பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.

அவர் கூறியதாவது:

பிரசாத்ராவ் எனக்கு வளர்ப்பு தந்தை. என் தாய் வீட்டில் இல்லாதபோது அவர் தவறாக நடக்க முயற்சி செய்தார். ஆசைக்கு இணைங்குமாறு வற்புறுத்தினார்.

செக்சுக்கு இணங்காவிட்டால் கொன்று விடுவதாக மிரட்டவும் செய்தார். என் தாய் பொருளாதார ரீதியாக அவரை சார்ந்து வாழ வேண்டி இருந்தால் என்னால் பொலிசில் புகார் செய்ய முடியவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து வளர்ப்பு தந்தை மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்க பொலிசார் முடிவு செய்துள்ளனர்.


Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : | |
Proudly powered by Kesavan
Copyright © 2014. Tamil News tamildiscovery Jaffna news Yarl news - All Rights Reserved
Original Design by Tamilcinema4u@hotmail.com