பதின்ம வயது சிறுமிகள் வல்லுறவு: தந்தை மாற்றும், உறவினர் கைது! - Tamil News tamildiscovery Jaffna news Yarl news
Headlines News :
Home » » பதின்ம வயது சிறுமிகள் வல்லுறவு: தந்தை மாற்றும், உறவினர் கைது!

பதின்ம வயது சிறுமிகள் வல்லுறவு: தந்தை மாற்றும், உறவினர் கைது!

Written By NIsha on Sunday, August 18, 2013 | 9:07 PM

பதுளை மாவட்டத்தில் இரு வெவ்வேறு இடங்களில் இரண்டு சிறுமிகள் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு அவ்விருவரும் வெலிமடை மற்றும் மகியங்கனை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வெலிமடை பகுதியின் டயரபா தோட்டத்தில் ஒன்பது வயது நிரம்பிய சிறுமி தேயிலைத் தோட்டத்தில் வைத்து பாலியல் வல்லுறவிற்குட்படுத்தப்பட்டுள்ளார். இது தொடர்பாக சிறுமி பெற்றோரிடம் கூறவே பெற்றோர் அவரை வெலிமடை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

இது தொடர்பாக வெலிமடை பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து சிறுமியின் உறவினர் ஒருவரை கைது செய்ய நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். குறித்த நபர் (வயது 54) தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மற்றுமொரு சம்பவம் மகியங்கனைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. தனிமையில் இருந்த பதினொரு வயது சிறுமி ஒருவர் வல்லுறவிற்குட்படுத்தப்பட்டுள்ளார். சிறுமி தனக்கேற்பட்ட நிலை குறித்து தாயிடம் கூறவே தாயார் அச்சிறுமியை மகியங்கனை பொலிஸ் நிலையம் அழைத்துச் சென்று முறைப்பாடொன்றினை பதிவு செய்து விட்டு மகியங்கனை அரசினர் மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து சிறுமியின் தந்தையை மகியங்கனைப் பொலிஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபரை மகியங்கனை மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : | |
Proudly powered by Kesavan
Copyright © 2014. Tamil News tamildiscovery Jaffna news Yarl news - All Rights Reserved
Original Design by Tamilcinema4u@hotmail.com