மகனின் எதிரில் தாய் வல்லுறவு: இராணுவத்தினரின் பாதகச்செயல்! - Tamil News tamildiscovery Jaffna news Yarl news
Headlines News :
Home » » மகனின் எதிரில் தாய் வல்லுறவு: இராணுவத்தினரின் பாதகச்செயல்!

மகனின் எதிரில் தாய் வல்லுறவு: இராணுவத்தினரின் பாதகச்செயல்!

Written By NIsha on Tuesday, August 27, 2013 | 10:49 PM

ஹொரவபொத்தான பிரதேசத்தில் 17 வயது உறவுமுறை மகனின் எதிரில் தாயை கொடூரமான முறையில் பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்த இராணுவப் படைவீரர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தாயை பாலியல் ரீதியாக துன்புறுத்திய படைவீர்ர்கள் வீட்டையும் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.

ஹொரவபொத்தான பிரதேச இராணுவ முகாமில் கடமையாற்றிய வீரர்களே இந்த குற்றச் செயலில் ஈடுபட்டுள்ளனர். குற்றச் செயலில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் நான்கு படைவீரர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அதிக மது போதையிலிருந்த படைவீரர்கள், வீட்டை உடைத்து இந்தப் பாதகச் செயலில் ஈடுபட்டுள்ளனர். சந்தேக நபர்களில் ஒருவர் இராணுவ கோப்ரல் எனத் தெரிவிக்கப்படுகிறது. கடமை நேரத்தின் பின்னர் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் ஓர் இராணுவ உத்தியோகத்தரின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.

அநுராதபுரத்தில் வீடு உடைத்துச் சென்று 49 வயதான தாய் ஒருவரை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் அடிப்படையில் நான்கு இராணுவத்தினர் பதவியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.

விரிவாக:

பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்ட பெண்ணின் கணவன் மற்றும் அவரது புதல்வர்கள் மூவரும் இராணுவத்தில் கடமையாற்றுபவர்கள் என தெரியவந்துள்ளது. அநுராதபுரம், கொரவிப்பத்தானை பிரதேசத்தில் கடந்த 8ஆம் திகதி மோட்டார் வண்டிகளில் சென்ற இராணுவ சிப்பாய்கள் நால்வர் இவ்வாறு பாலியல் பலாத்காரத்தை புரிந்துள்ளனர்.

இதன்போது அவ் வீட்டில் 49 வயதான தாயும் அவரது உறவினரான 17 வயதான சிறுவன் ஒருவரும் இருந்துள்ளனர். இராணுவ சிப்பாய்கள் வீட்டில் இருந்த அந்த சிறுவனின் கை, கால்களை கட்டி அறை ஒன்றில் பூட்டி அத் தாயை பலாத்காரத்திற்கு உட்படுத்தியுள்ளனர்.

இதன்போது வீட்டிலிருந்து முப்பத்தையாயிரம் ரூபா பணம், ஒரு சோடி தோடு, கையடக்கத் தொலைபேசி என்பவற்றை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.

அவ் வீட்டிலிருந்து கொள்ளையிட்டுச் சென்ற தொலைபேசியை பயன்படுத்தியதைத் தொடர்ந்து சந்தேகநபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டனர். 
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : | |
Proudly powered by Kesavan
Copyright © 2014. Tamil News tamildiscovery Jaffna news Yarl news - All Rights Reserved
Original Design by Tamilcinema4u@hotmail.com