பலாத்காரம் செய்ய முயன்ற நபரின் ஆணுறுப்பை வெட்டி விரட்டிய வீரப் பெண்! - Tamil News tamildiscovery Jaffna news Yarl news
Headlines News :
Home » » பலாத்காரம் செய்ய முயன்ற நபரின் ஆணுறுப்பை வெட்டி விரட்டிய வீரப் பெண்!

பலாத்காரம் செய்ய முயன்ற நபரின் ஆணுறுப்பை வெட்டி விரட்டிய வீரப் பெண்!

Written By NIsha on Thursday, August 8, 2013 | 8:16 AM

இந்தியாவின் ஒரிசாவில் தன்னைப் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற நபரின் ஆணுறுப்பை கூரிய ஆயுதத்தால் வெட்டி விரட்டியுள்ளார் பெண்ணொருவர்.

வெட்டுப்பட்டு தப்பியோடிய நபர் அடுத்த நாள் பொலிஸில் புகார் வழங்கியதைத் தொடர்ந்து இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.

ஜகத்சிங்பூர் என்ற கிராமத்தில் வசிக்கும் இரண்டு குழந்தைகளின் தாயான குறித்த பெண், கோவிலுக்குப் போய் விட்டுத் திரும்பியுள்ளார். அப்போது வழியில் இரண்டு பேர் சேர்ந்து அப்பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றார். அவர்களிடமிருந்து தப்பிக்க ஓடிய அப்பெண் அருகில் இருந்த கோவிலுக்குள் போய் அடைக்கலம் புகுந்தார்.

கோவில் என்றும் பாராது அந்த காமுகர்கள் அப்பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றனர். இதையடுத்து ஆவேசமடைந்த அப்பெண், கோவிலுக்குள் கிடந்த ஒரு கூரிய ஆயுதத்தை எடுத்து படு வேகமாக தன் மீது பாய்ந்த நபரின் ஆணுறுப்பைப் பிடித்து ஆவேசமாக அறுத்து விட்டார்.

இதில் வலியால் துடித்த அந்த நபர் பலாத்காரத்தைக் கைவிட்டு விட்டு உயிரைக் காக்க வெளியே ஓடினார். மற்ற நபரும் தலை தெறிக்க ஓடிவிட்டார். பின்னர் அந்த நபர் மருத்துவமனையில் போய்ச் சேர்ந்தார். அடுத்த நாள் கட்டுப் போட்ட நிலையில், பொலிஸாரிடம் போய் புகார் கூறினார். பொலிஸார் புகாரைப் பதிவு செய்துள்ளனர்.

இருப்பினும் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. அடிபட்ட அந்த நபர் மீண்டும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : | |
Proudly powered by Kesavan
Copyright © 2014. Tamil News tamildiscovery Jaffna news Yarl news - All Rights Reserved
Original Design by Tamilcinema4u@hotmail.com