சிக்ஸ் பேக்கால் பெயிலியர் ஆகும் கிட்னி: விஷால் அதிர்ச்சி பேட்டி! - Tamil News tamildiscovery Jaffna news Yarl news
Headlines News :
Home » » சிக்ஸ் பேக்கால் பெயிலியர் ஆகும் கிட்னி: விஷால் அதிர்ச்சி பேட்டி!

சிக்ஸ் பேக்கால் பெயிலியர் ஆகும் கிட்னி: விஷால் அதிர்ச்சி பேட்டி!

Written By NIsha on Saturday, August 24, 2013 | 12:10 AM

வித்தியாசமான கெட்டப்புகளில் நடிக்கப் போகிறேன் என்று கிளம்பும் தமிழ்சினிமாவின் இளம் ஹீரோக்கள் பலரும் ‘சிக்ஸ் பேக்’ என்ற உடற்பயிற்சியை செய்து வருகிறார்கள்.

சூர்யா, தனுஷ், விக்ரம், விஷால், பரத் என தமிழ்சினிமாவின் இளம் ஹீரோக்கள் எல்லோருமே படத்துக்காக இந்த ‘சிக்ஸ்பேக்’கை செய்கிறார்கள். சமீபத்தில் இளம் ஹீரோ ஒருவர் கூட இந்த சிக்ஸ்பேக் உடற்பயிற்சியினால் ‘கிட்னி பெயிலியர்’ பிரச்சனைக்கு உள்ளானார் என்று பரபரப்பாக செய்திகள் வெளியாகின.

சுந்தர்.சி டைரக்‌ஷனில் தயாராகி வரும் ‘மதகஜராஜா’ படத்துக்காக இன்று மீடியாக்களை சந்தித்த நடிகர் விஷாலிடம் இந்த ‘சிக்ஸ்பேக்’கை செய்தால் உண்மையிலேயே கிட்னி பெயிலியராகுமா..? என்று ஒரு சீனியர் ரிப்போர்ட்டர் கேட்டார். இந்த கேள்வியை சற்றும் எதிர்பாராத விஷால் அதிர்ச்சியடைந்து சில நொடிகள் தனது உடம்பை தடவிப் பார்த்து விட்டு விளக்கமளித்தார். அப்போது அவர், “சிக்ஸ்பேக் உடற்பயிற்சியை எப்போதுமே செய்யக்கூடாது, ஒருமுறை செய்து விட்டு மீண்டும் நம் இயல்பான உடல்நிலைக்கு மாறிடணும், இல்லையென்றால் பிரச்சனை தான்” என்றார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது :

நீங்க சொன்னமாதிரி ‘சிக்ஸ்பேக்’கை போடுற அன்னைக்கு ஒருநாள் மட்டும் நம்ம உடம்புல தண்ணியோட அளவு கம்மியா இருக்கணும். அந்தக்கெட்டப்போட ஒரு படத்துக்கு 5 நாட்கள் ஷூட்டிங் எடுத்தாங்கன்னா அந்த 5 நாட்கள் மட்டும் தான் அவங்க அந்த உடம்போட இருக்கணும். ஆனா அதையே கண்டினியூவ் பண்ணக்கூடாது.

நான் இந்தப்படத்தோட க்ளைமாக்ஸ் முடிஞ்ச உடனே நான் நார்மல் ஃலைப்புக்கு மாறிட்டேன். அதேமாதிரி தான் படத்துக்கு தேவைப்படுற நாட்கள் மட்டும் அந்த சிக்ஸ்பேக் பண்ணிட்டு உடனே நம்மளோட நார்மல் ஃலைப்புக்கு திரும்பிடணும். அதையே நாம கண்டினியூவ் பண்ணினா உடல்ரீதியாக பிரச்சனை ஏற்படும், அதுமட்டுமில்லாம அந்த பாதிப்புகள் முகத்துல கூட தெரியும்.

சிக்ஸ் பேக்ங்கிறது பென்ஸ்கார் மாதிரி கொஞ்சம் காஸ்ட்லியான விஷயம் தான். அதனால் அதை கொஞ்சம் பார்த்து தான் ட்ரை பண்ணனும்.

இவ்வாறு விஷால் கூறினார்.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : | |
Proudly powered by Kesavan
Copyright © 2014. Tamil News tamildiscovery Jaffna news Yarl news - All Rights Reserved
Original Design by Tamilcinema4u@hotmail.com