விலங்குகளுக்கு கூட தேவைப்படும் போது எனக்குத் தேவைப்படாதா: ஹன்சிகா ஆவேசம்! - Tamil News tamildiscovery Jaffna news Yarl news
Headlines News :
Home » » விலங்குகளுக்கு கூட தேவைப்படும் போது எனக்குத் தேவைப்படாதா: ஹன்சிகா ஆவேசம்!

விலங்குகளுக்கு கூட தேவைப்படும் போது எனக்குத் தேவைப்படாதா: ஹன்சிகா ஆவேசம்!

Written By NIsha on Wednesday, August 14, 2013 | 3:17 AM

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ஹன்சிகா. தற்போது இவர், சிம்புவுடன் காதல் வயப்பட்டுள்ளார். இருவரும் தாங்கள் காதலிப்பதை ஒப்புக்கொண்டுள்ளனர். தற்போது இருவரும் படங்களில் பிஸியாக இருப்பதால் திருமணத்தை ஒத்தி வைத்துள்ளனர்.

இந்நிலையில் சிம்புவும்-ஹன்சிகாவும் பார்ட்டி ஒன்றில் மிக நெருக்கமாக கட்டியணைத்தபடி இருந்த போட்டோக்கள் இணையதளங்களில் வெளியாகியுள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார் ஹன்சிகா. இதுகுறித்து ஹன்சிகாவை தொடர்பு கொண்டு கேட்டபோது, கோபத்தில் கொதிக்கின்ற எண்ணெய்யில் போட்ட கடுகு போல பொரிந்து தள்ளிவிட்டார்.

அவர் கூறியதாவது, விலங்குகளுக்கு கூட ஒரு ரிலாக்சேஷன் தேவைப்படும் போது மனிதர்களுக்கு தேவைப்படாதா...? எப்பவும் ஷூட்டிங், ஷூட்டிங் என்று ஓடிக்கொண்டு இருக்கும் எனக்கும் அவ்வப்போது ஒரு ரிலாக்சேஷன் தேவைப்படுகிறது. நானும் ஒரு மனுஷி தானே, அதுமட்டும் இல்லாது இது என்னுடைய முதல் காதல். சிம்புவும், நானும் தனிப்பட்ட முறையில் எடுத்தது. அது எப்படி வெளியானது என்றே தெரியவில்லை.

ராத்திரி, பகல் என்று பாராமல் சினிமாவில் நான் ரொம்ப கஷ்டப்பட்டு உழைக்கிறேன். நான் யாருடைய வேலையிலும் தலையிடுவது இல்லை, யாருடைய வேலையையும் கெடுப்பதில்லை, யாருடைய வாய்ப்பையும் தட்டிபறிப்பது இல்லை. அப்படி இருக்கையில் என்னைப்பற்றி அவ்வப்போது ஏதாவது கிசுகிசுக்கள், தவறான செய்திகள் வந்து கொண்டு தான் இருக்கிறது. இது எல்லாமே என் இமேஜை கெடுப்பதற்காக யாரோ சிலர் இதுபோன்ற வேலைகளை செய்கின்றனர். இதுபோன்று இன்னும் எத்தனை போட்டோக்கள் வந்தாலும் சரி, என்னைப்பற்றி எவ்வளவு கிசுகிசுக்கள் வந்தாலும் சரி நான் சோர்ந்து போய் உட்கார்ந்து விட மாட்டேன். இதனால் என் வாய்ப்புகள் குறையப் போவது கிடையாது. இன்னும் அதிகமாக தான் உழைக்கப்போகிறேன். இதற்கெல்லாம் நான் பயப்படப்போவது கிடையாது. என்னை யாரும் ஒன்றும் செய்ய முடியாது.

என் அம்மா தான் ரொம்ப அப்‌சட்டாகியுள்ளார். மேலும் இதுபோன்ற விஷயங்கள் என் ரசிகர்களிடம் என்னைப்பற்றி தவறாக கொண்டு போய் சேர்த்துவிடும். ஆனால் என்னைப்பற்றி என் ரசிகர்களுக்கு தெரியும். அவர்களை நான் நன்கு புரிந்து வைத்திருக்கிறேன். என் தனிப்பட்ட விஷயங்களில் நடக்கும் விஷயங்களை நான் பிறருக்கு பப்ளிசிட்டி பண்ண விரும்பவில்லை. இந்த போட்டோ எப்படி வெளியானது என்றும் தெரியவில்லை. அதை வெளியிட்டவர்கள் யார் என்று தெரிந்தால் அவர்களுக்கு தக்க தண்டனை வாங்கித் தருவேன் என்று ஆவேசமாக கூறினார்.


Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : | |
Proudly powered by Kesavan
Copyright © 2014. Tamil News tamildiscovery Jaffna news Yarl news - All Rights Reserved
Original Design by Tamilcinema4u@hotmail.com