ஊடகவியலாளர் வீட்டில் கொள்ளையிட வந்தவர்கள்: இவர்கள் தான்! - Tamil News tamildiscovery Jaffna news Yarl news
Headlines News :
Home » » ஊடகவியலாளர் வீட்டில் கொள்ளையிட வந்தவர்கள்: இவர்கள் தான்!

ஊடகவியலாளர் வீட்டில் கொள்ளையிட வந்தவர்கள்: இவர்கள் தான்!

Written By NIsha on Saturday, August 24, 2013 | 10:10 AM

கொழும்பு - பம்பலபிட்டி டிக்மன் வீதி இலக்கம் 9 என்ற முகவரியில் உள்ள ஊடகவியலாளர் வீட்டில் இன்று (24) அதிகாலை கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அவர்களின் பெயர் விபரங்களை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.

அதன்படி பொலிஸ் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த நபர் பதிரபுலிகே இந்திக்க சம்பத் குமாரசிறி என்ற நபரே உயிரிழந்துள்ள நிலையில், அவர் இலக்கம் 39 வெரலுபிட்டிய அவிசாவளை என்ற முகவரியைச் சேர்ந்தவராவார்.

ஏனைய நான்கு சந்தேகநபர்களும், கஹதமோதர - ஹுங்கம
கெட்டஹெத்த - அவிசாவளை
மாகொலவீதி - கிரிபத்கொட
லுனம - அம்பலாந்தோட்ட ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.

கொள்ளையர்கள் பயன்படுத்திய தற்சமயம் பொலிஸார் வசமுள்ள பொருட்கள் பின்வருமாறு,

முச்சக்கரவண்டி ஒன்று
கத்தி ஒன்று
சிறிய மன்னா கத்தி ஒன்று
ஸ்குருப் கருவி ஒன்று
கைக்குண்டு ஒன்று

இச்சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரும் பம்பலபிட்டி பொலிஸாரும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தொடர்புடைய செய்தி.

Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : | |
Proudly powered by Kesavan
Copyright © 2014. Tamil News tamildiscovery Jaffna news Yarl news - All Rights Reserved
Original Design by Tamilcinema4u@hotmail.com