அனுமதியின்றி கடைக்கு சென்ற மனைவியை போட்டுத் தள்ளிய கணவன்! - Tamil News tamildiscovery Jaffna news Yarl news
Headlines News :
Home » » அனுமதியின்றி கடைக்கு சென்ற மனைவியை போட்டுத் தள்ளிய கணவன்!

அனுமதியின்றி கடைக்கு சென்ற மனைவியை போட்டுத் தள்ளிய கணவன்!

Written By NIsha on Sunday, August 18, 2013 | 12:45 AM

ஆப்கானிஸ்தானில் முன் அனுமதி பெறாமல் கடைக்குச் சென்ற மனைவியை சுட்டுக் கொன்ற கணவனை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

ஆப்கானிஸ்தான் சஹர் தாரா மாவட்டத்தை சேர்ந்த, கொடைடாட்வுக்கு மனவியும் இரு குழந்தைகளும் உள்ளனர். சம்பவத்தன்று கொடைடாட்விடம் சொல்லாமல் கடைக்குச் சென்றுள்ளார் அவரது மனைவி. அவரை கடைத்தெருவில் பார்த்த கொடைடாட்வின் நண்பர்கள் உடனடியாக அதை கொடைடாட்விடம் தெரிவித்து விட்டனர். மனைவி கடைக்குச் சென்றதை ஊர்ஜிதப் படுத்த அவசரமாக வீடு திரும்பியுள்ளான் கொடைடாட்.

அந்நேரம் பார்த்து கடைக்குச் சென்றிருந்தமனைவி வீடு திரும்ப, தன்னிடம் சொல்லாமல் மனைவி கடைக்குச் சென்ற ஆத்திரத்தில் துப்பாக்கியை எடுத்து மனைவியைச் சுட்டுள்ளான் கொடைடாட். இதில் சம்பவ இடத்திலேயே அப்பெண் பரிதாபமாக பலியாகியுள்ளார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தலைமறைவாக உள்ள கொடைடாட்டை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : | |
Proudly powered by Kesavan
Copyright © 2014. Tamil News tamildiscovery Jaffna news Yarl news - All Rights Reserved
Original Design by Tamilcinema4u@hotmail.com