பௌத்த மதப் பெண் கற்பளிப்பு: முஸ்லிம்களின் வீடுகள், கடைகளுக்கு தீ வைப்பு! - Tamil News tamildiscovery Jaffna news Yarl news
Headlines News :
Home » » பௌத்த மதப் பெண் கற்பளிப்பு: முஸ்லிம்களின் வீடுகள், கடைகளுக்கு தீ வைப்பு!

பௌத்த மதப் பெண் கற்பளிப்பு: முஸ்லிம்களின் வீடுகள், கடைகளுக்கு தீ வைப்பு!

Written By NIsha on Sunday, August 25, 2013 | 9:51 AM

பௌத்த மதத்தினருக்கும், முஸ்லிம் மக்களுக்கும் இடையே ஏற்பட்ட தொடர் கலவரங்களால் மியான்மர் நாடு அமைதி இழந்து நிற்கிறது.

இனக்கலவரங்கள் சிறிது தணிந்திருந்த வேளையில், தற்போது நேற்று பௌத்த மதப் பெண் ஒருவர், முஸ்லிம் ஒருவனால் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார் என்ற வதந்தி பரவியதை அடுத்து மீண்டும் கலவரம் வெடித்துள்ளது.

கண்ட்பாலு என்ற இடத்திற்கு அருகில் உள்ள கிராமம் ஒன்றில் இந்த சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது. செய்தியை கேள்விப்பட்ட கிராம மக்கள் அங்கிருந்த பொலிஸ் நிலையத்தை அணுகி குற்றவாளியைத் தங்களிடம் விடுமாறு கேட்டுள்ளனர். அங்கிருந்த பொலிஸார் மறுக்கவே, ஆத்திரமடைந்த அந்தக் கும்பல் பனிரெண்டுக்கும் மேற்பட்ட முஸ்லிம் மக்களின் வீடுகளையும், கடைகளையும் தீ வைத்துக் கொளுத்தியுள்ளனர். இந்தத் தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று குறிப்பிட்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது என்பதனையும் குறிப்பிட்டார்.

ஆயினும், அதற்குள் 35 வீடுகளும், 12 கடைகளும் தீவிபத்தில் சேதமடைந்துள்ளதாக அவர் மேலும் கூறினார்.

நேற்று இரவு இந்த சம்பவம் நடந்ததாக பௌத்த மதத்தில் தீவிர ஈடுபாடு கொண்ட விராத்து என்ற துறவி ஒருவர், தன்னுடைய இணையதளப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.



Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : | |
Proudly powered by Kesavan
Copyright © 2014. Tamil News tamildiscovery Jaffna news Yarl news - All Rights Reserved
Original Design by Tamilcinema4u@hotmail.com