ஜில்லா படப்பிடிப்பில் சிறுமியிடம் சில்மிஷம்? பின்னி மில் வளாகத்தில் சம்பவம்!! - Tamil News tamildiscovery Jaffna news Yarl news
Headlines News :
Home » » ஜில்லா படப்பிடிப்பில் சிறுமியிடம் சில்மிஷம்? பின்னி மில் வளாகத்தில் சம்பவம்!!

ஜில்லா படப்பிடிப்பில் சிறுமியிடம் சில்மிஷம்? பின்னி மில் வளாகத்தில் சம்பவம்!!

Written By NIsha on Wednesday, August 28, 2013 | 9:19 PM

'தலைவா' வெளியீட்டு சிக்கலால் 'ஜில்லா' படப்பிடிப்பில் கலந்துகொள்ளாமல் இருந்தார் விஜய்.

வெளியீட்டுக்கான தடை நீங்கிய தகவல் கிடைத்ததுமே சென்னை பின்னி மில் வளாகத்தில் ‘ஜில்லா’ படப்பிடிப்பு சுறுசுறுப்பாகத் தொடங்கியது.

பொதுவாகவே விஜய் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் படக்குழுவுக்கு சம்பந்தமில்லாதவர்கள் நுழையக்கூடாது என்பதால் ரொம்பவே கெடுபிடி இருக்கும். இப்போது அந்த கெடுபிடி பலமடங்கு அதிகரித்துள்ளது. ஆஜானபாகுவான பத்துக்கும் மேற்பட்டவர்களை சீருடையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தியுள்ளார்கள் படக்குழுவினர்.

கடந்தவாரம் விஜய், காஜல் அகர்வால் உள்ளிட்டவர்களுடன் ஏராளமான ஜூனியர் ஆர்டிஸ்ட்டுகளும் படப்பிடிப்பில் கலந்துகொண்டனர்.

படப்பிடிப்பின் இடைவேளையின்போது ஆங்காங்கே அமர்ந்திருந்தனர்.

15 வயது சிறுமியான ஜூனியர் நடிகை ஒருவர் ஒரு ஓரமாக அமர்ந்திருக்க, பாதுகாப்பு பணியில் இருந்த காவலாளி ஒருவர் அந்த சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட... அந்த பெண் கூச்சல் போட்டதையடுத்து அவரை வளைத்துப் பிடித்தனர் ஜூனியர் ஆர்டிஸ்ட்டுகள். ஒரே கூச்சலும் குழப்பமுமாக அந்த இடமே ரணகளப்பட... அந்த சிறுமியின் உறவினர்கள் பொலிஸில் புகார் கொடுக்கப்போவதாக சொல்ல ‘பிரச்சினையையை பெருசுபடுத்தாதீங்க’ என ஜூனியர் ஆர்டிஸ்ட் ஏஜெண்ட் சமாதானப்படுத்தியதோடு, நடந்த பிரச்சினைக்கு பிராயச்சித்தமாக ஒரு தொகையையும் கொடுத்திருக்கிறார்.

ஆனாலும் பிரச்சினை ஓயாமல் இருந்துவர... ஜில்லா படத்தின் படப்பிடிப்பு வேலைகளை தினசரி கவனித்து வரும் ஆர்.பி.சௌத்ரியின் மகன் ‘ஜித்தன்’ ரமேஷ் இந்த பிரச்சினையில் தலையிட்டிருக்கிறார்.

நடந்த பிரச்சினையை கேட்டறிந்த ‘ஜித்தன்’ ரமேஷ், அந்த செக்யூரிட்டியை ஜில்லா படப்பிடிப்பிற்கு வரக்கூடாது என்று கூறியதோடு, அந்த சிறுமியையும் இனி படப்பிடிப்புக்கு நடிக்க வரவேண்டாம் என்று கூறிவிட்டதோடு இனி நடக்கும் பிரச்சினைகளை வெளியில் பார்த்துக்கொள்ளுங்கள் என்று கூறிவிட்டார்.

வெளியேறிய அந்த சிறுமியின் உறவினர்கள் அந்த காவலாளியின் டூவீலரை எடுத்துக்கொண்டு ‘பிரச்சினைக்கு முடிவு கிடைச்சதும் வண்டியை வாங்கிக்கோ’ எனச் சொல்லிவிட்டு போய்விட்டார்கள்.

விஷயம் விஜய்யின் காதுகளுக்கு போக ஏங்ணா.. என்னை கொஞ்சம் கூட நிம்மதியா இருக்க விட மாட்டீங்களா..? என்று ஸ்பாட்டில் உள்ளவர்களிடம் டென்ஷனில் கத்தி விட்டாராம் விஜய்.

ஜில்லா திரைப்படத்தில் விஜய் பொலிஸ் கதாபாத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : | |
Proudly powered by Kesavan
Copyright © 2014. Tamil News tamildiscovery Jaffna news Yarl news - All Rights Reserved
Original Design by Tamilcinema4u@hotmail.com