துப்பாக்கி சூட்டில் பெண் உட்பட இரு விமானப் படையினர் பலி! - Tamil News tamildiscovery Jaffna news Yarl news
Headlines News :
Home » » துப்பாக்கி சூட்டில் பெண் உட்பட இரு விமானப் படையினர் பலி!

துப்பாக்கி சூட்டில் பெண் உட்பட இரு விமானப் படையினர் பலி!

Written By NIsha on Sunday, August 18, 2013 | 9:48 PM

திருகோணமலை - பளிங்கு கடற்கரை மாபல்பீச் பகுதியில் உள்ள விமானப்படை விடுதியொன்றில் ஞாயிற்றுக்கிழமை  இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் விமானப் படையினர் இருவர் உயிரிழந்துள்ளனர். காதல் பிரச்சினை காரணமாகவே இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


இந்த சம்பவத்தில் மேலும் ஒருவர் காயமடைந்த நிலையில் கிண்ணியா ஆதார வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  விமானப் படையில் பணி புரியும் பெண் ஒருவரும் விமானப்படை வீரர் ஒருவருமே விமானப்படை கோப்ரல் ஒருவரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளனர்.

விமானப்படை கோப்ரல் குறித்த இருவர் மீதும் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதன் பின்னர் தன்னைத் தானும் சுட்டுள்ளார்.

இதன்போது துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான குறித்த நபர்கள் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் படுகாயமடைந்த கோப்ரல் ஆபத்தான நிலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றார்.

காதல் விவகாரமே இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்திற்கு காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.

Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : | |
Proudly powered by Kesavan
Copyright © 2014. Tamil News tamildiscovery Jaffna news Yarl news - All Rights Reserved
Original Design by Tamilcinema4u@hotmail.com