சித்தார்த்-சமந்தா இரகசிய திருமணம்? திரையுலகில் பரபரப்பு! - Tamil News tamildiscovery Jaffna news Yarl news
Headlines News :
Home » » சித்தார்த்-சமந்தா இரகசிய திருமணம்? திரையுலகில் பரபரப்பு!

சித்தார்த்-சமந்தா இரகசிய திருமணம்? திரையுலகில் பரபரப்பு!

Written By NIsha on Tuesday, August 27, 2013 | 8:32 AM

உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் சித்தார்த்தும் சமந்தாவும் ரகசிய திருமணம் செய்து கொண்டதாக தெலுங்கு திரையுலகில் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

இருவரும் காதலிப்பதாக ஏற்கனவே கிசுகிசுக்கள் வந்தன. ‘ஜபர்தங்க்’ என்ற தெலுங்கு படத்தில் ஜோடியாக நடித்தார்கள். அப்போது நெருக்கம் ஏற்பட்டு காதல் மலர்ந்ததாக கூறப்பட்டது.

தமிழில் சித்தார்த் நடித்த ‘தீயா வேலை செய்யனும் குமாரு’ படத்தில் சமந்தா சில சீன்கள் கௌரவ தோற்றத்தில் வந்து போனார். சித்தார்த்தும் சமந்தாவும் இருமாதங்களுக்கு முன் காளகஸ்தி கோவிலுக்கு ஜோடியாக வந்தனர். இருவரின் பெற்றோரும் உடன் வந்தார்கள். கோவிலில் அருகருகே அமர்ந்து பூஜை மற்றும் பிரார்த்தனையில் ஈடுபட்டனர். அப்போது தான் காதல் விவரம் வெளிச்சத்துக்கு வந்தது.

அதன்பிறகு இருவரும் தனித்தனியாக படங்களில் நடிக்க துவங்கினர். சமந்தாவுக்கு தெலுங்கில் 5 படங்கள் கைவசம் உள்ளன. அவற்றில் இருபடங்களின் படப்பிடிப்பு முடிந்துள்ளது. தமிழில் லிங்குசாமி இயக்கும் படத்தில் நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார்.

சித்தார்த் தமிழில் ‘ஜிகர்தண்டா’, ‘காவிய தலைவன்’ படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில்தான் தற்போது இருவரும் ரகசிய திருமணம் செய்து கொண்டதாக செய்தி பரவியுள்ளது. ஐதராபாத்தில் இந்த திருமணம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. திருமணம் முடிந்ததும் இருவரும் கணவன், மனைவியாகபோய் சித்தார்த்தின் நெருங்கிய நண்பர் ஒருவர் திருமணத்தில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தி விட்டு வந்தார்களாம்.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : | |
Proudly powered by Kesavan
Copyright © 2014. Tamil News tamildiscovery Jaffna news Yarl news - All Rights Reserved
Original Design by Tamilcinema4u@hotmail.com