அப்பிள் ஓஎஸ்-7 (IOS-operating system-7). - Tamil News tamildiscovery Jaffna news Yarl news
Headlines News :
Home » » அப்பிள் ஓஎஸ்-7 (IOS-operating system-7).

அப்பிள் ஓஎஸ்-7 (IOS-operating system-7).

Written By NIsha on Friday, September 20, 2013 | 10:44 PM

ஆப்பிள் நிறுவனம் சென்ற செப்டம்பர் 10 ஆம் தேதி புதிய மாடல் ஐபோன்களான ஐபோன் 5S மற்றும் ஐபோன் 5C உடன் தனது லேட்டெஸ்ட் மொபைல் ஓஎஸ் ஆன ஐஓஎஸ் 7யையும் வெளியிட்டது.

இந்த புதிய மொபைல் ஓஸ் இப்பொழுது உலக அளவில் வெளியிடப்பட்டுள்ளது. நீங்கள் உங்கள் ஆப்பிள் ஐபோன், ஐபேட் அல்லது ஐபாட் டச்ல் உள்ள பழைய ஓஎஸ்களை மாற்றி ஆப்பிள் புதிய ஐஓஎஸ் 7யை அப்டேட் செய்துகொள்ளலாம். இப்பொழுது ஆப்பிளின் புதிய ஓஎஸ் பற்றிய தகவல்களும், தொளிற்ப்பாடுகளும்.

* நீங்கள் போனை பயன்படுத்த பழைய ஐஓஎஸ் 6ல் ஸ்கிரீனின் இடது பக்கம் ஸ்வைப் செய்ய வேண்டும் . ஆனால் இந்த புதிய ஓஎஸ்ல் ஸ்கிரீனில் எந்த பக்க வேண்டுமானாலும் ஸ்வைப் செய்து போனை எளிதாக பயன்படுத்தலாம்.

* Settings > iTunes & App Store > Automatic Downloads சென்று ஆட்டோமேடிக் டவுன்லோடை ஆன் செய்துவிட்டால் போதும் அப்டேட் ஆக வேண்டிய அப்ளிகேஷன் அதுவாக டவுன்லோட் ஆகி அப்டேட் ஆகிக்கொள்ளும்.

* நீங்கள் பனோரமாவில் எடுக்கும் போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் தனியாக ஆல்பத்திற்க்குள் ஒவ்வொன்றும் தனி போல்டரில் ஷேவ் ஆகிக்கொள்ளும்.

* இதில் உள்ள போட்டோ அப்ளிகேஷன் போட்டோக்களை Years > Collections > Moments என்ற வகையில் ஆக்சஸ் செய்ய உதவும்.

* Momentsல் உள்ள போட்டோக்கள் தேதி மற்றும் இடத்தின் பெயருடன் சேமிக்க பட்டிருக்கும் அதை நீங்கள் Momentsல் இருந்து Share > Share this moment என்ற ஆப்ஷனை கிளிக் எளிதாக மற்றவர்களிடம் போட்டோக்களை பகிர்ந்துகொள்ளலாம்.

* போட்டோ அப்ளிகேஷன் மூலம் போட்டோக்களை சுழற்றலாம், கிராப் செய்யலாம், போட்டோவில் கண்களில் சிகப்பு புள்ளி போல் இருந்தால் அதை சரி செய்யலாம் மேலும் போட்டகளில் பில்டர்களை கூட்டலாம்.

* இதில் உள்ள நோட்டிபிக்கேஷன் சென்டரில் Todays tab என்று உள்ளது அதன் மூலம் இன்று என்னென்ன நடந்தது என்ன நடக்கிறது ஆகிய குறிப்புகளை அறியலாம்.

* ஐஓஎஸ் 7 ஓஎஸ்ல் Airdrop என்ற ஒரு ஆப்ஷன் உள்ளது இதன் மூலம் நீங்கள் ஓரே wi-fi கனெக்ஷனில் கனெக்ட் செய்யப்பட்ட சாதனங்களுக்கு பைல்களை எளிதாக பகிர்ந்துகொள்ளலாம்.

* இதில் உள்ள மெசேஜ் அப்ளிகேஷன் கான்டெக்ட் மற்றும் காலர் பற்றிய தகவல் அறிய, உடனே கால் செய்ய உதவும் வகையில் ஆப்ஷன்களை கொண்டுள்ளது.

* இந்த புதிய ஓஎஸ்ல் உள்ள கன்ட்ரோல் சென்டர் மூலம் மேல் இருந்து கீழ் ஸ்வைப் செய்தால் போதும் அதில் நீங்கள் பல அப்ளிகேஷன்களை எளிதாக பயன்படுத்தலாம்.

* நீங்கள் ஒரு காலரை பிளாக் செய்ய வேண்டும் என்று எண்ணினால் Contacts > Select a contact > Block this Caller இந்த ஆப்ஷனில் பிளாக் செய்யலாம்.

*App Store > Updates tab > Purchased > Search இந்த ஆப்ஷனில் சென்று பர்ச்சேஸ் செய்த அப்ளிகேஷன் பற்றி அறியலாம்.

* இதில் உள்ள கேமரா அப்ளிகேஷன் மூலம் சதுர வடிவில் போட்டோக்களை எடுக்கலாம்

* திறந்துள்ள அப்ளிகேஷனை மூட வேண்டும் என்றால் ஹோம் ஸ்கிரீனில் டபுள் கிளிக் செய்தால் போதும். அப்ளிகேஷனை ரிமூவ் செய்ய ஸ்கிரீன் மேல் பகுதிக்கு டிராக் செய்யுங்கள்.

* ஆப்பிள் ஓஎஸ்ல் உள்ள சிரி அப்ளிகேஷன் பெண்ணின் குரலில் தான் பேசும். இப்பொழுது இதில் ஆணின் குரலும் உள்ளது அதற்க்கு நீங்கள் General > Settings > Siri > Voice Gender > Male இந்த ஆப்ஷனை பயன்படுத்த வேண்டும்.

* இதில் உள்ள world clock மற்ற நாட்டை விட நமது டைம் எத்தனை மணி நேரம் பின்னாடி உள்ளது என்பதையும் காமிக்கும்.

* நீங்கள் உங்கள் வசதிகேற்ப எழுத்துகளின் அளவை மாற்ற Settings > General > Text Size என்ற ஆப்ஷனை பயன்படுத்தலாம்.

* Find My iPhoneயை ஆப் செய்வதற்க்கு பாஸ்வேர்ட் தேவைப்படும்.

* நீங்கள் itunes radio மூலம் உங்கள் விருபத்திற்க்கேற்ப ரேடியோவை கேட்கலாம்.

* இதில் உள்ள மேப்ஸ் அப்ளிகேஷன் இப்பொழுது மிகவும் தெளிவாக உள்ளது.

iOS 7 இயங்குதளத்திற்கான Google Translate அப்பிளிக்கேஷனில் புதிய வசதி:

கூகுள் நிறுவனத்தினால் வழங்கப்பட்டு வரும் ஒன்லைன் மூலமான மொழிபெயர்ப்பு சேவைக்கான மொபைல் அப்பிளிக்கேஷன்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

தற்போது சில தினங்களுக்கு முன்னர் அப்பிள் நிறுவனத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டிருந்த iOS 7 இயங்குதளத்தில் செயற்படக்கூடியவாறு தனது மொழிபெயர்ப்பு அப்பிளிக்கேஷனை மேம்படுத்தியிருக்கின்றது கூகுள்.

இதில் டைப் செய்யாது கைகளால் தொடுதிரையில் எழுதப்படும் எழுத்துக்களை புரிந்துகொண்டு அவற்றினை மொழிபெயர்ப்பு செய்யும் வசதி உட்புகுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு 70 மேற்பட்ட மொழிகளை கையால் எழுதும்போது அவற்றை உணரக்கூடியவாறு காணப்படுவது இந்ந அப்பிளிக்கேஷனின் சிறப்பியல்பு ஆகும்.

மொழிகள்:

Afrikaans, Albanian, Arabic, Armenian, Azerbaijani, Basque, Belarusian, Bengali, Bosnian, Bulgarian, Catalan, Cebuano, Chinese (Simplified), Chinese (Traditional), Croatian, Czech, Danish, Dutch, English, Esperanto, Estonian, Filipino, Finnish, French, Galician, Georgian, German, Greek, Gujarati, Haitian Creole, Hebrew, Hindi, Hmong, Hungarian, Icelandic, Indonesian, Irish, Italian, Japanese, Javanese, Kannada, Khmer, Korean, Lao, Latin, Latvian, Lithuanian, Macedonian, Malay, Maltese, Marathi, Norwegian, Persian, Polish, Portuguese, Romanian, Russian, Serbian, Slovak, Slovenian, Spanish, Swahili, Swedish, Tamil, Telugu, Thai, Turkish, Ukrainian, Urdu, Vietnamese, Welsh, Yiddish.

Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : | |
Proudly powered by Kesavan
Copyright © 2014. Tamil News tamildiscovery Jaffna news Yarl news - All Rights Reserved
Original Design by Tamilcinema4u@hotmail.com