உலகில் தினமும் பட்டினியால் வாடும் 87 கோடி மக்கள்: அதிர்ச்சி ஆய்வு! - Tamil News tamildiscovery Jaffna news Yarl news
Headlines News :
Home » » உலகில் தினமும் பட்டினியால் வாடும் 87 கோடி மக்கள்: அதிர்ச்சி ஆய்வு!

உலகில் தினமும் பட்டினியால் வாடும் 87 கோடி மக்கள்: அதிர்ச்சி ஆய்வு!

Written By NIsha on Thursday, September 12, 2013 | 8:27 PM

மூன்றில் ஒரு பங்கு உணவு வீணாவதால் உலகில் தினமும் 87 கோடி மக்கள் பட்டினியால் அவதிப்படுகின்றனர்.

ஐ.நா.சபையின் உணவு மற்றும் விவசாய நிறுவனம் சார்பில் சர்வதேச அளவில் ஆய்வு நடத்தப்பட்டது. அதில் உலக அளவில் உற்பத்தியாகும் உணவு பொருட்கள் பெருமளவில் வீணாக்கப்படுவது தெரிய வந்தது.

அதாவது ஆண்டொன்றுக்கு 130 கோடி டன் உணவு பொருட்கள் வீணடிக்கப்படுகிறது. இதனால் உலகம் முழுவதும் ஏராளமான மக்கள் பட்டினி கிடக்கின்றனர்.

அதாவது நாள் ஒன்றுக்கு 87 கோடி பேர் உணவு இன்றி பட்டினி கிடப்பது தெரிய வந்துள்ளது. உணவு பொருட்கள் வீணடிக்கப்படுவதன் மூலம் ரூ.55 ஆயிரம் கோடி மதிப்புள்ள உணவு பொருட்கள் வீணாவதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவற்றில் மீன்கள் மற்றும் கடல் உணவு பொருட்கள் அடங்காது.

உலகம் முழுவதும் 28 சதவீதம் நிலங்களில் விவசாயம் மூலம் உணவு பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. அவை வளர்ந்த நாடுகளில் பெருமளவில் வாங்கப்பட்டு சாப்பிடாமல் குப்பையில் கொட்டப்படுகின்றன.

இவை தவிர அதிகமாக விளையும் உணவு தானியங்கள், பழங்கள் மற்றும் காய்கறிகளை பாதுகாப்பாக வைக்க குளிர்சாதன சேமிப்பு கிடங்கு வசதிகள் இல்லாததும் ஒரு காரணமாகும்.

ஆசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இதுபோன்ற காரணங்களால் உணவு பொருள் வீணாகிறது. அதே வேளையில் சீனா மற்றும் அமெரிக்காவில் பயன்படுத்தப்படாமல் உணவு பொருட்கள் வீணடிக்கப்படுவதும் அறிக்கையில் தெரிய வந்துள்ளது.

நீங்கள் உண்ணும் உணவின் ஒரு 'துகள்' வீணடிக்கப்பட்டாலும், உலகின் பட்டினிக்கு நீங்களும் மறைமுகமாகவோ அல்லது நேரடியாகவோ காரணமாகின்றீர்கள்! 



Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : | |
Proudly powered by Kesavan
Copyright © 2014. Tamil News tamildiscovery Jaffna news Yarl news - All Rights Reserved
Original Design by Tamilcinema4u@hotmail.com