பசிபிக் கடலில் உருவான புயல் மெக்சிகோவை தாக்கியது! - Tamil News tamildiscovery Jaffna news Yarl news
Headlines News :
Home » » பசிபிக் கடலில் உருவான புயல் மெக்சிகோவை தாக்கியது!

பசிபிக் கடலில் உருவான புயல் மெக்சிகோவை தாக்கியது!

Written By NIsha on Sunday, September 15, 2013 | 11:20 PM

பசிபிக் கடலில் உருவான இன்கிரிட் என்ற புயல் மெக்சிகோவை தாக்கியதில் 24 பேர் பலியாகியுள்ளனர்.

இன்கிரிட் என்ற புயல் பலவீனம் அடைந்து மான்ஷானியோ துறைமுக பகுதியில் கரையை கடந்தது.

இதனால் அங்கு பெய்த பலத்த மழை தொடர்ந்து ஆறுகளில் வெள்ளப்பெருக்கும், நிலச் சரிவும் ஏற்பட்டது.

குயரெரோ கடற்கரை மாகாணத்தில் அகாபுல்கோ புறநகரில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒரு வீடு பூமிக்குள் புதைந்தது.

அதில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பலியாகியுள்ளனர். 3 பேர் ஆற்று வெள்ளத்திலும், ஒருவர் வீட்டு சுவர் இடிந்து விழுந்தும் இறந்தனர்.

குயெர்ரோ நகரில் மலைப் பகுதியில் வாகனம் கவிழ்ந்து உருண்டதில் 8 பேர் பலியாகினர். அது போன்று பியூப்லா, ஒயாசாகா உள்ளிட்ட இடங்களில் நடந்த நிலச்சரிவுகளில் சிக்கி இறந்துள்ளனர்.

மொத்தத்தில் மெக்சிகோவில் புயலில் சிக்கி 24 பேர் பலியாகி உள்ளனர்.

Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : | |
Proudly powered by Kesavan
Copyright © 2014. Tamil News tamildiscovery Jaffna news Yarl news - All Rights Reserved
Original Design by Tamilcinema4u@hotmail.com