சக்தி மில்: அம்பலமாகும் மேலும் பல திடுக்கிடும் பலாத்கார குற்றங்கள்! - Tamil News tamildiscovery Jaffna news Yarl news
Headlines News :
Home » » சக்தி மில்: அம்பலமாகும் மேலும் பல திடுக்கிடும் பலாத்கார குற்றங்கள்!

சக்தி மில்: அம்பலமாகும் மேலும் பல திடுக்கிடும் பலாத்கார குற்றங்கள்!

Written By NIsha on Thursday, September 5, 2013 | 5:01 AM

மும்பை சக்தி மில்லில் பெண் பத்திரிகையாளர் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்து சிக்கிய கும்பலைச் சேர்ந்த ஐந்து பேரும் கடந்த 6 மாதத்தில் 10 பெண்களை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தியதாக பரபரப்புத் தகவல் வெளியாகியுள்ளது.

அதே இடத்தில்தான் இந்த அக்கிரமங்களை இவர்கள் தொடர்ந்து செய்து வந்துள்ளனர். முன்னதாக இவர்கள் நான்கு பேர் வரை பலாத்காரம் செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது.

ஆனால் தற்போது 10 பேரை இவர்கள் நாசப்படுத்தியிருப்பது தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.

சக்தி மில்லை இந்தக் கும்பல் பலாத்காரம் செய்யும் கூடம் போல பயன்படுத்தி வந்துள்ளது. இந்தக் கும்பலில் இந்த ஐந்து பேரைத் தவிர மேலும் பலர் இருக்கலாம் என்றும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சக்தி மில் பகுதியில் பாலியல் பலாத்காரத்துக்குள்ளான 2வது பெண் கொடுத்த வாக்குமூலத்தில் மேலும் இருவர் குறித்த தகவலைத் தெரிவித்துள்ளார்.

அதில் ஒரு நபரை பொலிஸார் பிடித்துள்ளதாக தெரிகிறது. இன்னொரு நபருக்கு வலை வீசப்பட்டுள்ளது.

சக்தி மில் பாலியல் பலாத்கார சம்பவத்தில் பெண் பத்திரிக்கையாளர் மற்றும் இன்னொரு பெண் மட்டுமே முன்வந்து புகார் தெரிவித்துள்ளனர். இதேபோல பாதிக்கப்பட்ட பிற பெண்களும் வந்தால் இந்த மிகப் பெரிய சதித் செயலின் பின்னால் உள்ள அத்தனைக் குற்றவாளிகளையும் பிடிக்க முடியும் என பொலிஸார் கருதுகின்றனர்.

சிக்கிய ஐந்து குற்றவாளிகளும் கொடுத்த தகவல்களின்படி இதுவரை அவர்கள் 10 பேரை பலாத்காரம் செய்திருப்பது உறுதியாகியுள்ளதாக விசாரணை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்தக் கும்பல் முதலில் தனியாக இருக்க விரும்பி இந்த மில் பக்கம் ஒதுங்கிய ஒரு ஜோடியை பிடித்துள்ளது. அந்த நபரை மிரட்டி பெண்ணை பலாத்காரம் செய்துள்ளனர்.

சில வாரங்கள் கழித்து அந்தப் பகுதியில் குப்பை பொறுக்க வந்த பெண்ணை சீரழித்துள்ளனர்.

அதேபோல சில நாட்கள் கழித்து ஒரு விபச்சாரப் பெண்ணைக் கூட்டி வந்துள்ளனர். அவரிடம் இன்பம் அனுபவித்து விட்டு காசு கொடுக்காமல் விரட்டி விட்டனர்.

கடந்த மார்ச் மாதம் இந்தப் பக்கமாக நடந்து போன ஒரு பெண்ணை, தாங்கள் பொலிஸ் என்று மிரட்டி தனியான இடத்திற்குக் கூட்டிக் கொண்டு போய் பலாத்காரம் செய்துள்னர்.

சக்தி மில்லினுள் நடந்தது என்ன?

பலாத்காரத்திற்குப் பின் அந்த இடத்தை சுத்தம் செய்யப் பணித்த குற்றவாளிகள்!

மும்பையில் பெண் புகைப்பட பத்திரிகையாளர் வல்லுறவு!
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : | |
Proudly powered by Kesavan
Copyright © 2014. Tamil News tamildiscovery Jaffna news Yarl news - All Rights Reserved
Original Design by Tamilcinema4u@hotmail.com