நயினாதீவு பிரதேச கடற்பரப்பில் இராட்சத சுறா மீன் ஒன்று அப்பகுதி மீனவரின் வலையில் சிக்கிய நிலையில் கரைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.மீன் பிடிதொழிலுக்காக இன்று அதிகாலை நயினாதீவு பகுதியில் இருந்து சென்ற ஒருவரின் வலையிலேயே சுறா மீன் சிக்கியுள்ளது.
சுமார் 25 அடி நீளமும், 1000 கிலோ எடையும் கொண்ட இந்த மீனை பெருமளவான மக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.
மிகுந்த சிரமத்துடன் இந்த இராட்சத மீனை கரைக்கு எடுத்து வந்திருப்பதாக குறிப்பிடும் மீனவர்கள், எனினும் தாம் மிகுந்த மகிழ்ச்சியுடன் இருப்பதாகவும் இம்மீன் அதிக தொகைக்கு விலை போகும் என தாம் நம்புவதாகவும் குறிப்பிடுகின்றனர்.
இக் கடற்ப்பகுதிகளில் அரிதாகவே இவ்வகை இராட்சத மீன்கள் பிடிப்படுமென்பது குறிப்பிடத்தக்கது.






0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !