ஜேர்மனில் முதன் முறையாக ஆண் ஒருவருக்கு குழந்தை பிறந்துள்ளது! - Tamil News tamildiscovery Jaffna news Yarl news
Headlines News :
Home » » ஜேர்மனில் முதன் முறையாக ஆண் ஒருவருக்கு குழந்தை பிறந்துள்ளது!

ஜேர்மனில் முதன் முறையாக ஆண் ஒருவருக்கு குழந்தை பிறந்துள்ளது!

Written By NIsha on Monday, September 9, 2013 | 9:46 AM

ஜேர்மனில் முதன் முறையாக ஆண் ஒருவருக்கு குழந்தை பிறந்துள்ளது.

ஜேர்மனியில் கடந்த மார்ச் மாதம் 18ம் திகதி தனது வீட்டிலேயே ஆண் ஒருவர், குழந்தையை பெற்றெடுத்துள்ளார். இவர் ஒரு திருநங்கை ஆவார்.

குழந்தையின் பிறப்பு குறித்து மருத்துவமனை பதிவேட்டில் பதிவதற்காக, குறித்த நபரிடம் குழந்தையின் தாயார் பெயரை கேட்டுள்ளனர்.

ஆனால் அந்தக் குழந்தைக்கு தாய் இல்லை, தந்தை மட்டுமே என்று அக்குழந்தையின் தந்தையான திருநங்கை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மருத்துவர்கள், இவ்வாறு நடப்பதற்கு சாத்தியம் உள்ளது.

திருநங்கையான நபர் குழந்தை பெற்றுக் கொள்ள முடியும் என்று தெரிவித்துள்ளனர்.

மேலும் செல்களை தானமாக பெற்றதன் மூலம் இவர் குழந்தை பெற்றுள்ளார் என பிரபல பத்திரிக்கை தகவல் வெளியிட்டுள்ளது.

இதேபோன்று அமெரிக்காவில் Thomas Beatie என்பவர் மூன்று குழந்தைகளை பெற்றெடுத்தேன் என தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. தாமஸ் சம்மந்தப்பட்ட விடியோ உங்கள் பார்வைக்கு.

Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : | |
Proudly powered by Kesavan
Copyright © 2014. Tamil News tamildiscovery Jaffna news Yarl news - All Rights Reserved
Original Design by Tamilcinema4u@hotmail.com