வரதட்சனைக் கொடுமை: காதல் மனைவிக்கு தீ வைத்து கொளுத்திய கணவன்! - Tamil News tamildiscovery Jaffna news Yarl news
Headlines News :
Home » » வரதட்சனைக் கொடுமை: காதல் மனைவிக்கு தீ வைத்து கொளுத்திய கணவன்!

வரதட்சனைக் கொடுமை: காதல் மனைவிக்கு தீ வைத்து கொளுத்திய கணவன்!

Written By NIsha on Sunday, September 15, 2013 | 11:00 AM

தமிழகத்தின் அம்பாசமுத்திரம் அருகே வரதட்சனை கேட்டு காதல் மனைவி மீது மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்து கொடூரமான கணவன் மீது பொலிஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

அம்பாசமுத்திரம் அருகே அயன்சிங்கம்பட்டி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த வேம்பு மகன் மதியழகன் (23) என்பவர், வைராவிகுளம் காமராஜர்புரம் பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் மகள் அபிராமி (22) என்பவரை 2 வருடங்களுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இத்தம்பதிக்கு 7 மாத பெண் குழந்தை உள்ளது. காதல் திருமணம் செய்து கொண்டதால் அபிராமிக்கு அவரது பெற்றோர் தங்க நகைகள் எதுவும் சீதனமாக வழங்கவில்லையாம்.

இதற்கிடையே அபிராமியின் சகோதரி பிரபாவதிக்கு சில தினங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. பிரபாவதிக்கு அவரது சகோதரர் சீதனமாக தங்க நகைகள் போட்டு திருமணம் செய்து கொடுத்தாராம்.

இதையடுத்து அபிராமியிடம் மதியழகன் நீயும் தங்க நகைகள் வாங்கி வருமாறு கேட்டாராம். இது தொடர்பாக வெள்ளிக்கிழமை இரவு இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாம்.

இதில் மதியழகன், தனது மனைவி அபிராமி மீது மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்தாராம்.

பலத்த காயமடைந்த அபிராமி திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். கல்லிடைக்குறிச்சி பொலிஸார் மதியழகன் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : | |
Proudly powered by Kesavan
Copyright © 2014. Tamil News tamildiscovery Jaffna news Yarl news - All Rights Reserved
Original Design by Tamilcinema4u@hotmail.com