குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்க வேண்டும்: பாதிக்கப்பட்ட பெண் ஆவேசம்! - Tamil News tamildiscovery Jaffna news Yarl news
Headlines News :
Home » » குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்க வேண்டும்: பாதிக்கப்பட்ட பெண் ஆவேசம்!

குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்க வேண்டும்: பாதிக்கப்பட்ட பெண் ஆவேசம்!

Written By NIsha on Friday, September 6, 2013 | 4:02 AM

மும்பை சக்தி மில்ஸில் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட 19 வயது இளம்பெண் தன்னை இக்கொடூரதிற்கு ஆளாக்கிய நபர்களின் ஆண்மையை நீக்க வேண்டுமென்று ஆவேசமாக கூறியுள்ளார்.

மும்பையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 22 ஆம் திகதி சக்தி மில்ஸ் பகுதியில், பெண் பத்திரிக்கையாளர் ஒருவர் 5 பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டார்.

குற்றவாளிகளை சம்பவம் நடந்து 70 மணி நேரத்திற்குள் கைது செய்த பொலிசார் அவர்களை விசாரித்தப்போது பல திடுக்கிடும் உண்மைகள் தெரியவந்தன.

விசாரணையில், இந்த 5 பெரும் இதற்கு முன் அதே சக்தி மில்ஸ் பகுதியில் கடந்த 6 மாதங்களில் 10 பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியுள்ளனர் என்பதும், அவர்கள் யாரும் இவர்கள் மீது புகார் அளிக்காததால் இவர்களது அட்டூழ்யம் தொடர்ந்து நடைபெற்று வந்ததும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், இந்த குற்றவாளிகள் கும்பல் ஜூலை மாதம் 31 ஆம் திகதி தன்னை பலாத்காரம் செய்ததாக கால் சென்டரில் பணிப்புரியும் பெண் ஒருவர் புகார் அளித்தார்.

இது குறித்து அப்பெண் தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு கூறுகையில், அவர் தனக்கு நீதி கிடைக்கவேண்டும் என்பதற்காக தொடர்ந்து பெண்களுக்கு இத்தகைய கொடுமைகளை செய்துவரும் இந்த குற்றவாளிகளின் ஆண்மையை நீக்கவேண்டுமென ஆவேசப்பட்டிருக்கிறார்.

அப்போதுதான் இவர்கள் மீண்டும் இத்தகைய கொடுமையை வேறொரு பெண்ணுக்கு செய்யமாட்டார்கள் என அவர் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

அம்பலமாகும் மேலும் பல திடுக்கிடும் பலாத்கார....
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : | |
Proudly powered by Kesavan
Copyright © 2014. Tamil News tamildiscovery Jaffna news Yarl news - All Rights Reserved
Original Design by Tamilcinema4u@hotmail.com