வீரத்துக்கு பின்வாங்கிய ஜில்லா! - Tamil News tamildiscovery Jaffna news Yarl news
Headlines News :
Home » » வீரத்துக்கு பின்வாங்கிய ஜில்லா!

வீரத்துக்கு பின்வாங்கிய ஜில்லா!

Written By NIsha on Wednesday, September 4, 2013 | 3:47 AM

பலகட்ட சிக்கல்களுக்குப் பிறகு ‘தலைவா’ படம் ரிலீஸாகி விட்ட சந்தோஷத்தில் இருக்கும் விஜய் அடுத்து ‘ஜில்லா’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் வேலையில் சுறுசுறுப்பாக இறங்கியிருக்கிறார்.

‘தலைவா’ படத்திற்குப் பிறகு சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பில் ஆர்.பி. சௌத்ரி தயாரித்து வரும் படம் ‘ஜில்லா’. இப்படத்தில் விஜய், காஜல் அகர்வால், மோகன்லால், பூர்ணிமா பாக்யராஜ் உட்பட பலரும் நடித்து வருகின்றனர்.

ரீமேக் புகழ் ஜெயம் ராஜாவின் உதவியாளர் நேசன் இப்படத்தை டைரக்ட் செய்து வருகிறார்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு ‘தலைவா’ பட பிரச்சினைகளால் கவலையில் இருந்த விஜய் தற்போது, அந்த பிரச்சனைகளிலிருந்து மீண்டு வந்து விட்டார். இதனால் ‘ஜில்லா’ படப்பிடிப்பில் அதிக உற்சாகத்துடன் காணப்படும் அவர் முந்தைய படங்களை விட இந்தப் படத்தில் வித்தியாசமான கேரக்டரில் வருகிறாராம்.

முழுக்க முழுக்க மதுரையை கதைக்களமாகக் கொண்டு படமாக்கப்பட்டு வரும் இந்தப்படம் இப்போதே ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘தலைவா’ படம் தமிழ்நாட்டில் லேட்டாக ரிலீஸானதால் கோபத்தில் இருக்கும் அவரது ரசிகர்களை குஷிபடுத்த ‘ஜில்லா’ படத்தை வேகமாக முடித்து ரிலீஸ் செய்யச் சொல்லியிருக்கிறாராம் விஜய்.

அதில் முதற்கட்டமாக விஜய் தனது ரசிகர்களுக்கு விநாயகர் சதுர்த்தி விருந்தாக ‘ஜில்லா’வின் போஸ்டரை (First Look) வெளியிட திட்டமிட்டுள்ளாரம். அந்த போஸ்டர் டிசனை வடிவமைக்கும் வேலைகளில் பிஸியாக இருக்கிறார் டைரக்டர் நேசன்.

‘தலைவா’ தந்த மனவேதனையை ‘ஜில்லா’ படம் போக்கி விடும் என்று நம்பிக்கையோடு காத்திருக்கிறாராம் விஜய்.


 

 

 

 

 

 

 

 

 

 

 

வீரத்துக்கு பின்வாங்கிய ஜில்லா!

தற்போது ஆரம்பம் படத்தை முடித்து விட்டு வீரம் படப்பிடிப்பில் இருக்கிறார் அஜீத். இந்த நிலையில், ஆரம்பம் படத்தின் இறுதிகட்ட பணிகள் துரிதமாக நடந்து வருவதோடு, படத்தை தீபாவளிக்கு வெளியிடயிருப்பதாக நேற்று அப்படத்தின் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியிட்டார். அதைத்தொடர்ந்து அஜீத் நடித்து வரும் இன்னொரு படமான வீரம் படமும் பொங்கலுக்கு வெளியாவது அஜீத்தரப்பில் இருந்து உறுதி செய்யப்பட்டது.

இதனால் தீபாவளி, பொங்கலுக்கு வெளியாகவிருந்த சில படங்கள் பின்வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதில், ஆர்.பி.செளத்ரி தயாரிப்பில் விஜய் நடித்து வரும் ஜில்லா படமும் ஒன்று. இப்படத்தை பொங்கலுக்கு வெளியிடும் முடிவில் இருந்தனர். ஆனால், இப்போது அஜீத்தின் வீரம் படம் வெளியாக இருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதால், ஒரே நேரத்தில் இரண்டு படங்கள் வெளியாவது தியேட்டர் பிரச்னை உருவாக்கும் என்று ஜில்லா படத்தை பொங்கலுக்குப் பிறகு வெளியிட முடிவு செய்திருக்கிறார்களாம்.

ஆக, அஜீத்தின் வீரம் படத்தினால் விஜய்யின் ஜில்லா பின்வாங்கியிருக்கிறது.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : | |
Proudly powered by Kesavan
Copyright © 2014. Tamil News tamildiscovery Jaffna news Yarl news - All Rights Reserved
Original Design by Tamilcinema4u@hotmail.com