கோச்சடையான் டீசர்: வீடியோ! - Tamil News tamildiscovery Jaffna news Yarl news
Headlines News :
Home » » கோச்சடையான் டீசர்: வீடியோ!

கோச்சடையான் டீசர்: வீடியோ!

Written By NIsha on Monday, September 9, 2013 | 4:21 AM

ரஜினியின் கோச்சடையான் தீபாவளி சரவெடியாக வெளியாகப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் கோச்சடையான் படத்திற்கான இறுதிக்கட்டப் பணிகள் நடந்து வருகின்றன.

தீபாவளி அன்று வெளியீடு செய்ய திட்டமிட்டு இருப்பதால் டப்பிங் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. தற்போது ரஜினி, கோச்சடையான் தெலுங்கு வெர்சனுக்கு தெலுங்கு டப்பிங் பேசிக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் கோச்சடையான் தெலுங்கு படத்திற்கு விக்ரமசிம்ஹா என்று பெயர் வைத்திருப்பதாக படத்தின் இயக்குனர் சவுந்தர்யா டுவிட்டரில் தெரிவித்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் ஒரே நேரத்தில் கோச்சடையான் படத்தை வெளியிட சவுந்தர்யா திட்டமிட்டிருக்கிறார். ரஜினியை அடுத்து படத்தில் நடித்திருக்கும் சரத்குமார், நாசர், ருக்மணி, ஆகியோரும் தெலுங்கு டப்பிங் பேச இருக்கிறார்களாம்.

இந்நிலையில் கோச்சடையான் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இன்று மாலை கோச்சடையான் ரெயிலர் வெளியிடப்படவுள்ளது.

Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : | |
Proudly powered by Kesavan
Copyright © 2014. Tamil News tamildiscovery Jaffna news Yarl news - All Rights Reserved
Original Design by Tamilcinema4u@hotmail.com