சியாமின் படுகொலை ரகசியம் டீ.என்.ஏ பரிசோதனையின் மூலம் அம்பலம்! - Tamil News tamildiscovery Jaffna news Yarl news
Headlines News :
Home » » சியாமின் படுகொலை ரகசியம் டீ.என்.ஏ பரிசோதனையின் மூலம் அம்பலம்!

சியாமின் படுகொலை ரகசியம் டீ.என்.ஏ பரிசோதனையின் மூலம் அம்பலம்!

Written By NIsha on Wednesday, September 11, 2013 | 11:05 AM

பம்பலப்பிட்டியில் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட கோடீஸ்வரரான மொஹமட் சியாம் படுகொலை தொடர்பிலான இரகசியம் டீ.என்.ஏ பரிசோதனையின் மூலமாக அம்பலமாகியுள்ளது என்று ரகசிய பொலிஸார் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவந்தனர்.

மொஹமட் சியாமை கடத்துவதற்காக பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் வானிலிருந்த இரத்தக்கறை அவருடையது என்று டீ.என்.ஏ பரிசோதனையின் மூலமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ரகசிய பொலிஸார் கொழும்பு மேலதிக நீதவான் மொஹமட் சஹாப்தீனின் கவனத்திற்கு கொண்டுவந்தனர்.

டீ.என்.ஏ பரிசோதனையை மேற்கொண்ட ஜின்டெக் நிறுவனத்தின் பரிசோதனை அறிக்கையின் பிரதியும் இணைக்கப்பட்டே நீதிமன்றத்திற்கு எழுத்துமூலமான அறிகை ரகசிய பொலிஸாரினால் கையளிக்கப்பட்டது.

கொழும்பு மேலதிக நீதவானிடமே இந்த எழுத்துமூல அறிக்கை ரகசிய பொலிஸ் பிரிவின் பிரதி பொலிஸ் அதிகாரி ஷானி அபேசேகரவினால் நேற்று 10 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கையளிக்கப்பட்டது.

அத்துடன் இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக நீதிமன்றத்தின் கவனத்திற்கு அவர் கொண்டுவந்தார்.

இந்தவழக்கு நேற்று செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே அவர் டீ.என்.ஏ பரிசோதனை அறிக்கையை கையளித்து மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்த சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்களில் முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தனவின் மகனுக்கு பாதுகாப்பு வழங்கினார் என்ற  திமுத்து ஸ்ரீமால் ஹெட்டியாராச்சி தவிரை ஏனைய ஏழு சந்தேகநபர்களும் சிறைச்சாலை அதிகாரிகளினால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்;தப்பட்டிருந்தனர்.

திமுத்து ஸ்ரீமால் ஹெட்டியாராச்சி காலி நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்ற அடையாள அணிவகுப்பில் ஈடுபடுத்த ப்படவேண்டி இருந்தமையினால் அவர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்படவில்லை.

முறைப்பாட்டாளர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி இந்த சம்பவம் தொடர்பில் 18 பேரிடம் ரகசிய பொலிஸார் வாக்குமூலங்களை பெற்றுக்கொண்டிருப்பதாக நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.

இந்நிலையில் முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன சார்பில் ஆஜரான சட்டத்தரணி, தனது தரப்பை சேர்ந்தவர் பொலிஸ் சேவையில் காண்பித்த சுவிஷேஷமான திறமைகளினால் அவர் பிரதி பொலிஸ் மா அதிபராக பதவியுயர்வு பெற்றுக்கொண்டார் என்றும் அவருக்கு எதிராக பொலிஸூக்குள் இருக்கினற் வைராக்கியம் காரணமாகவே அவருக்கு எதிராக இந்த குற்றச்சாட்டு சூழ்ச்சியான முறையில் முன்வைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

'ஒருவரது கெட்ட விடயங்கள் வெளியாகும் அவருடைய நல்ல விடயங்கள் வெளிபடும்' என்று கவிதை பாடிய சட்டத்தரணி எங்களுடைய பொது எதிரியான வேலுப்பிள்ளை பிரபாகரன் கூறுவது போல 'சிங்கள மக்களுக்கு இந்த விடயங்கள் ஞாபகத்தில் இருக்கும் அடுத்த கிரிக்கெட் போட்டி நடைபெறும் வரையிலும்' என்று கவிதையை கூறிமுடித்தார்.

கடந்த காலங்களில் இலங்கையை ஆட்டிபடைத்த பெண்கள் கொலை மற்றும் கிறிஸ் பேய் அச்சுறுத்தலை தனது தரப்பை சேர்ந்தவரே முடிவுக்கு கொண்டுவந்தார் என்றும் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

வாகனத்தில் இருந்த இரத்தகறை தொடர்பிலான பரிசோதனை நிறைவடைந்திருந்தால் அந்த வாகனம் தொடர்பில் அடுத்த வழக்கு தினத்தன்று அறிவிப்பதாக தெரிவித்த மேலதிக நீதவான் வழக்கை எதிர்வரும் 24 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : | |
Proudly powered by Kesavan
Copyright © 2014. Tamil News tamildiscovery Jaffna news Yarl news - All Rights Reserved
Original Design by Tamilcinema4u@hotmail.com