
இது மட்டுமன்றி கைண்டல் பயர் டெப்லட்கள், ஈ ரீடர்கள் என தொழில்நுட்ப சாதனங்களின் விற்பனையிலும் குறிப்பிடத்தக்களவு வளர்ச்சியை அமேசன் ஈட்டியுள்ளது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
ஸ்மார்ட் போன் வர்த்தக்கத்திலும் அமேசன் ஆர்வமாக இருப்பதாக பல நாட்களாக தெரிவிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் ஸ்மார்ட் போன் வர்த்தகத்தில் இலகுவாக முன்னணிக்கு வரும் பொருட்டு இலவசமாக ஸ்மார்ட்போன்களை வெளியிட அமேசன் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அப்பிள் மற்றும் செம்சுங் ஸ்மார்ட் போன் விரும்பிகளை தன்பக்கம் ஈர்க்கும் பொருட்டு அமேசன் இத்திட்டத்தை வகுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் ஸ்மார்ட் போன் உரிமையாளர்களிடமிருந்து அமேசன் பிரைம் போன்ற சேவைகளுக்கு கட்டணம் வசூலித்து இலவசமாக வழங்குவதற்கு ஏற்படும் செலவை சமாளிக்க அமேசன் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஆனாலும் இவ்வாறு ஒரு திட்டம் தம்மிடம் இல்லையெனவும், ஸ்மார்ட் போனை தாம் வெளியிட்டாலும் அதனை விற்பனை செய்வோமே தவிர இலவசமாக வழங்கமாட்டோம் என அமேசன் நிறுவன பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை அமேசன் நிறுவனமானது முப்பரிமாண திரையைக் கொண்டதும், கண் அசைவுக்கு கட்டுப்படக்கூடியதுமான ஸ்மார்ட் போன் ஒன்றை தனது ஆய்வு கூடத்தில் தயாரித்து வருவதாக இவ்வருட ஆரம்பத்தில் தகவல் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !