ஆறு மாடிக் கட்டட தொகுதியில் தீ! - Tamil News tamildiscovery Jaffna news Yarl news
Headlines News :
Home » » ஆறு மாடிக் கட்டட தொகுதியில் தீ!

ஆறு மாடிக் கட்டட தொகுதியில் தீ!

Written By NIsha on Friday, September 6, 2013 | 3:33 AM

கொழும்பு, வெள்ளவத்தை, ஹொலிங்வூட் வீதியிலுள்ள ஆறு மாடிக் கட்டட தொகுதியின் நான்காம் மாடியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

நேற்று (05) மாலை இந்த மாடித் தொகுதியில் தீ விபத்து ஏற்பட்டதாக வெள்ளவத்தை பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த மாடித் தொகுதியிலிருந்து புகை வெளியானதைத் தொடர்ந்து பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இதன் பின்னதாக பொலிஸார் மற்றும் தீயணைப்பு படையினர் இணைந்து தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளனர்.

தீயின் காரணமாக ஏற்பட்ட பொருட் சேதம் குறித்து இதுவரையில் தகவல்கள் வெளியாகவில்லை.

வெள்ளவத்தை பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : | |
Proudly powered by Kesavan
Copyright © 2014. Tamil News tamildiscovery Jaffna news Yarl news - All Rights Reserved
Original Design by Tamilcinema4u@hotmail.com