10 வயது சிறுமி பலாத்காரக் கொலை: வாய் பேச முடியாத சிறுவன், தந்தை கைது! - Tamil News tamildiscovery Jaffna news Yarl news
Headlines News :
Home » » 10 வயது சிறுமி பலாத்காரக் கொலை: வாய் பேச முடியாத சிறுவன், தந்தை கைது!

10 வயது சிறுமி பலாத்காரக் கொலை: வாய் பேச முடியாத சிறுவன், தந்தை கைது!

Written By NIsha on Wednesday, August 14, 2013 | 10:39 AM

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக வாய் பேச முடியாத சிறுவன் அவனது தந்தையுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெஜலெட்டி கிராமத்தை சேர்ந்தவர் பொம்மன். இறந்து விட்டார். இவருக்கு 2 மனைவிகள். முதல் மனைவி மாதி. 2வது மனைவி சின்னத்தாயி. முதல் மனைவிக்கு குழந்தைகள் இல்லை. 2வது மனைவிக்கு ஆறு குழந்தைகள் உள்ளன. இவரது கடைசிக் குழந்தைக்குப் பத்து வயதாகிறது.

இந்த நிலையில் கடந்த 6ம் தேதி அவர் அங்குள்ள சாமியார் மடம் என்ற இடத்தில் இறந்து கிடந்தார். அவரது உடலில் ரத்தக் காயங்கள் இருந்தன. பர்கூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டிருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து போலீஸார் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்போது சிறுமி, சாமியார் நாகராஜ் என்பவர் வீட்டுக்கு அடிக்கடி, டிவி பார்க்கப் போவார் என்று தெரிய வந்தது. இதையடுத்து சாமியாரைப் பிடித்து விசாரித்தபோது அவரது வீட்டுக்கு 17 வயது வாய் பேச முடியாத ஒரு சிறுவன் வந்து போவது தெரிய வந்தது. அந்த சிறுவன்தான் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளான். இதை தனது தந்தையிடமும் அவன் (சைகை மொழி) மூலம் தெரிவித்துள்ளான். இதையடுத்து அப்பாவும், மகனுமாக சேர்ந்து சிறுமியின் உடலை புதரில் போட்டு விட்டுச் சென்றுள்ளனர். இதையடுத்து இருவரையும் போலீஸார் தேடினர்.

இந்தநிலையில் இருவரும் விஏஓ மூலமாக போலீஸில் சரணடைந்தனர். போலீஸார் அவர்களைக் கைது செய்தனர். ஆனால் அப்பகுதி மக்கள் சிலர், சிறுவனை வேண்டும் என்றே போலீஸார் பலிகடாவாக்கியுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : | |
Proudly powered by Kesavan
Copyright © 2014. Tamil News tamildiscovery Jaffna news Yarl news - All Rights Reserved
Original Design by Tamilcinema4u@hotmail.com