இரவு விடுதியில் விபச்சாரம்: 21 பெண்கள் கைது! - Tamil News tamildiscovery Jaffna news Yarl news
Headlines News :
Home » » இரவு விடுதியில் விபச்சாரம்: 21 பெண்கள் கைது!

இரவு விடுதியில் விபச்சாரம்: 21 பெண்கள் கைது!

Written By NIsha on Monday, August 26, 2013 | 2:57 AM

சீதுவை பிரதேசத்தில் விபசார நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் கூறப்படும்  21 பெண்களை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

அப்பகுதியில் அமைந்துள்ள இரவு விடுதியொன்றிலிருந்தே இவர்கள் அனைவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். நீதிமன்ற உத்தரவொன்றை அடுத்து சுற்றிவளைப்பொன்றை மேற்கொண்ட போதே இவர்கள் விபசாரத்தில் ஈடுபட்டிருந்தமை பொலிஸாருக்கு தெரியவந்துள்ளது. இதன் போது கைதுசெய்யப்பட்ட பெண்கள் 20 -37 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதன்போது குறித்த விடுதியில் முகாமையாளராக செயற்பட்ட ஆணொருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : | |
Proudly powered by Kesavan
Copyright © 2014. Tamil News tamildiscovery Jaffna news Yarl news - All Rights Reserved
Original Design by Tamilcinema4u@hotmail.com