40 அடி உயர கிரேன் சரிந்தது: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார் கே.ஆர்.விஜயா! - Tamil News tamildiscovery Jaffna news Yarl news
Headlines News :
Home » » 40 அடி உயர கிரேன் சரிந்தது: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார் கே.ஆர்.விஜயா!

40 அடி உயர கிரேன் சரிந்தது: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார் கே.ஆர்.விஜயா!

Written By NIsha on Wednesday, August 14, 2013 | 6:42 AM

சுவடுகள் படப்பிடிப்பின்போது கிரேன் சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் நடிகைகள் கே.ஆர்.விஜயா, மோனிகா அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

"சுவடுகள்" படத்துக்கு கதை, திரைக்கதை எழுதி ஜெய்பாலா இயக்குகிறார். கதாநாயகனாக நடிக்கவும் செய்கிறார் ஜெய்பாலா. கதாநாயகியாக மோனிகாவும், முக்கிய வேடத்தில் கே.ஆர்.விஜயாவும் நடித்து வருகின்றனர்.

நெல்லை மாவட்டம், குற்றாலத்தில் நடந்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பில், 40 அடி உயர கிரேனில் கேமராவை பொருத்தி கே.ஆர்.விஜயா, மோனிகா நடித்த காட்சிகளை ஜெய்பாலா படமாக்கிக் கொண்டிருந்தார்.

அப்போது, மழையில் மண் ஈரமாகி இருந்ததால் கிரேன் அதன் பிடிப்பை இழந்து திடீரென சரிந்தது. இதில் கிரேன், கே.ஆர்.விஜயா, மோனிகா தலையில் விழப்போனது. இதை பார்த்து படக்குழுவினர் அலறினர். அப்போது, படப்பிடிப்பை வேடிக்கை பார்த்த 200 பேர் ஓடிச்சென்று கிரேனை தாங்கி பிடித்தனர். இதனால் கே.ஆர்.விஜயா, மோனிகா உயிர் தப்பினர்.

"விபத்தில் அதிர்ஷ்டவசமாக அனைவரும் தப்பினோம்" என்று இயக்குனர் ஜெய்பாலா கூறினார்.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : | |
Proudly powered by Kesavan
Copyright © 2014. Tamil News tamildiscovery Jaffna news Yarl news - All Rights Reserved
Original Design by Tamilcinema4u@hotmail.com