யுவதிகளை நிர்வாணப்படுத்தி வீடியோ எடுத்த தேரருக்கு விளக்கமறியல்! - Tamil News tamildiscovery Jaffna news Yarl news
Headlines News :
Home » » யுவதிகளை நிர்வாணப்படுத்தி வீடியோ எடுத்த தேரருக்கு விளக்கமறியல்!

யுவதிகளை நிர்வாணப்படுத்தி வீடியோ எடுத்த தேரருக்கு விளக்கமறியல்!

Written By NIsha on Wednesday, August 14, 2013 | 7:03 AM

யுவதிகள் இருவரை நிர்வாணப்படுத்தி வீடியோ படமெடுத்து அதனை தனது கணனியில் சேமித்து வைத்த விகாராதிபதி ஒருவரை எதிர்வரும் 27ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு பலபிட்டிய நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பெந்தொட்ட ரந்தாகொட பிரதேசத்தில் அமைந்துள்ள விஹாரையொன்றின் விஹாராதிபதி ஒருவரையே இவ்வாறு விளக்கமறியலில் வைக்க பலபிட்டிய நீதிவான் நீதிமன்றம் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளது.

இரு யுவதிகளை நிர்வாணப்படுத்தி படமெடுத்து அதனை தனது கணனியில் குறித்த தேரர் பதிவு செய்திருந்ததாக அவர் மீது பொலிஸார் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.

கணனியை திருத்துவதற்காக ஒரு இடத்திற்கு கொண்டு சென்று குறித்த தேரர் கொடுத்த போதே இந்த விடயங்கள் அம்பலத்துக்கு வந்தன.

இந்நிலையில் குறித்த தேரர் சார்பாக நீதிமன்றில் ஆஜரான சட்டத்தரணி தேரர் ஆன்மிக ரீதியாகக் தவறிழைத்திருப்பதை ஏற்றுக்கொள்வதாகவும் எழுதப்பட்ட சட்டங்களின் அடிப்படையில் அவர் எதுவித தவறையும் செய்யவில்லையெனவும் வாதிட்டார். இந்நிலையில் குறித்த நிர்வாணப் படங்கள் தொடர்பில் விசேட பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறும் அதன் அறிக்கையை சமர்ப்பிக்கவும் பணித்துள்ளதுடன் எதிர்வரும் 27ஆம் திகதி வரை தேரரை விளக்க மறியலில் வைக்குமாறும் பொலி ஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : | |
Proudly powered by Kesavan
Copyright © 2014. Tamil News tamildiscovery Jaffna news Yarl news - All Rights Reserved
Original Design by Tamilcinema4u@hotmail.com