80 லட்சம் பெறுமதியான இரத்தின கற்ககளை விழுங்கிய வர்த்தகரின் மலவாயில்! - Tamil News tamildiscovery Jaffna news Yarl news
Headlines News :
Home » » 80 லட்சம் பெறுமதியான இரத்தின கற்ககளை விழுங்கிய வர்த்தகரின் மலவாயில்!

80 லட்சம் பெறுமதியான இரத்தின கற்ககளை விழுங்கிய வர்த்தகரின் மலவாயில்!

Written By NIsha on Friday, August 16, 2013 | 11:58 PM

இலங்கையில் இருந்து சிங்கப்பூருக்கு இரத்தினக்கல் கடத்திச் செல்ல முயற்சித்த ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமானத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

மலவாயிலில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 80 லட்சம் பெறுமதியான 38 இரத்தினக் கற்கள் குறித்த நபரிடம் இருந்து விமான நிலைய சுங்கப் பிரிவினர் மீட்டுள்ளனர்.

பேருவளை பிரதேசத்தைச் சேர்ந்த 56 வயது வர்த்தகரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடம் இருந்து நீல கல், கண்ணாடிக்கல், கெம்பு உள்ளிட்ட 9 வர்க்க இரத்தினக் கற்கள் குறித்த வர்த்தகரிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளன.

எஸ்.பியு 403 என்ற விமானத்தின் மூலம் சிங்கப்பூர் செல்ல முயன்ற சந்தேகநபர் நேற்று (16) இரவு 11.30 அளவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து சுங்கப் பிரிவு விசாரணை மேற்கொண்டு வருவதாக சுங்கப்பிரிவு ஊடகப் பேச்சாளர் லெஸ்லி காமினி தெரிவித்தார்.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : | |
Proudly powered by Kesavan
Copyright © 2014. Tamil News tamildiscovery Jaffna news Yarl news - All Rights Reserved
Original Design by Tamilcinema4u@hotmail.com