மணிவண்ணன் மனைவி திடீர் மரணம்! - Tamil News tamildiscovery Jaffna news Yarl news
Headlines News :
Home » » மணிவண்ணன் மனைவி திடீர் மரணம்!

மணிவண்ணன் மனைவி திடீர் மரணம்!

Written By NIsha on Friday, August 16, 2013 | 11:36 PM

கணவர் இறந்த இரண்டு மாதத்தில் நடிகர் மணிவண்ணன் மனைவி செங்கமலம் திடீரென மரணம் அடைந்தார்.

பிரபல நடிகரும், இயக்குனருமான மணிவண்ணன் கடந்த ஜூன் 15ஆம் திகதி மாரடைப்பால் மரணமடைந்தார். இதையடுத்து, அவரது மனைவி செங்கமலம் (55) மகன் ரகுவண்ணனுடன் சென்னை கே.கே.நகர் ஜெய்பாலாஜி நகர் திருமலை தெருவில் வசித்து வந்தார். கணவர் இறந்த பின்னர் சோகத்தில் இருந்த செங்கமலத்திற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்டது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த செங்கமலம் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த திரையுலகினர் செங்கமலத்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவரது இறுதிச் சடங்கு மாலை நடைபெறுகிறது.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : | |
Proudly powered by Kesavan
Copyright © 2014. Tamil News tamildiscovery Jaffna news Yarl news - All Rights Reserved
Original Design by Tamilcinema4u@hotmail.com