தனிமை தேடி காட்டுக்குள் ஒதுங்கிய ஜோடிக்கு நேர்ந்த கொடூரம்! - Tamil News tamildiscovery Jaffna news Yarl news
Headlines News :
Home » » தனிமை தேடி காட்டுக்குள் ஒதுங்கிய ஜோடிக்கு நேர்ந்த கொடூரம்!

தனிமை தேடி காட்டுக்குள் ஒதுங்கிய ஜோடிக்கு நேர்ந்த கொடூரம்!

Written By NIsha on Wednesday, August 21, 2013 | 10:27 AM

காட்டுக்குள் தனிமையாக இருக்க விரும்பி ஒதுங்கிய ஒரு ஆணும், பெண்ணும் பிணமாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.

திருவரங்குளம் புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள தைல மரக் காட்டில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

பிணமாகக் கிடந்த ஆணுக்கும், பெண்ணுக்கும் சுமாராக 30 வயது இருக்கலாம் என்று கருதப்படுகிறது. அந்தப் பெண்ணும், ஆணும் கட்டிப்பிடித்த நிலையில் பிணமாகக் கிடந்துள்ளனர். பெண்ணை பல இடங்களில் கூரிய ஆயுதத்தால் கொடூரமாகக் குத்திக் கொலை செய்துள்ளனர். ஆணின் உடலில் காயமே இல்லை.

இது குறித்து பொலிசார் விசாரணை நடத்தியதில், அந்த ஆணின் பெயர் கொத்தக்கோட்டை குமரேசன் என்று தெரியவந்துள்ளது. திருமணம் ஆகாத இவர் திருப்பூரில் வேலை பார்த்து வந்தாராம். அவருடன் கிடந்த பெண் உள்ளூரைச் சேர்ந்தவர் இல்லை என்று கூறப்படுகிறது. எனவே அவரை, குமரேசன்தான் திருப்பூரிலிருந்து கூட்டி வந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

மேலும் இவர்கள் கிடந்த பகுதியில் லோடு ஆட்டோ வந்து போன தடயத்தை பொலிசார் கண்டுபிடித்துள்ளனர்.

இவர்கள் தனியாக இருப்பதைப் பார்த்த ஏதோ ஒரு கும்பல் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து பின்பு கொலை செய்திருக்கலாம் என்று பொலிசார் சந்தேகத்தின் பேரில் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : | |
Proudly powered by Kesavan
Copyright © 2014. Tamil News tamildiscovery Jaffna news Yarl news - All Rights Reserved
Original Design by Tamilcinema4u@hotmail.com