சவுதியில் தொடரும் மரண தண்டனைகள்: (தலை துண்டிப்புகள்)! - Tamil News tamildiscovery Jaffna news Yarl news
Headlines News :
Home » » சவுதியில் தொடரும் மரண தண்டனைகள்: (தலை துண்டிப்புகள்)!

சவுதியில் தொடரும் மரண தண்டனைகள்: (தலை துண்டிப்புகள்)!

Written By NIsha on Wednesday, August 21, 2013 | 9:00 AM

சவுதி அரேபியாவில் இரண்டு குற்றவாளிகளுக்கு தலை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதுகுறித்து உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில், இப்ராஹிம் அல் குவன்பார் மற்றும் அஹமத் அல் முசலாம் என்ற இருவர் தொழிலாளர் முகாம் ஒன்றினைத் தாக்கியதுடன், அங்கிருந்த குடியிருப்புகளுக்குத் தீ வைத்துள்ளனர்.

இதில் முகமது அல் சுஜா என்ற தொழிலாளி கொல்லப்பட்டுள்ளார், மற்றொருவர் காயமடைந்துள்ளார். தனையடுத்து கிழக்குப் பிராந்தியத்தின் குவாடிப் மாவட்டத்தில் நேற்று இவர்கள் இருவரும் சிரச்சேதம் செய்யப்பட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தாண்டு மட்டும் மரணதண்டனை பெற்றவர்களின் எண்ணிக்கை 60ஆக உயர்ந்துள்ளது. இதேபோன்று ஈராக்கில் ஒரேநாளில் 2 பெண்கள் உட்பட 17 பேருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதற்கு, உலகம் முழுவதிலும் இருந்து மனித உரிமை ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : | |
Proudly powered by Kesavan
Copyright © 2014. Tamil News tamildiscovery Jaffna news Yarl news - All Rights Reserved
Original Design by Tamilcinema4u@hotmail.com