தற்கொலைக்கு முயன்ற காதலியை தந்திரமாக காப்பாற்றிய காதலன்! - Tamil News tamildiscovery Jaffna news Yarl news
Headlines News :
Home » » தற்கொலைக்கு முயன்ற காதலியை தந்திரமாக காப்பாற்றிய காதலன்!

தற்கொலைக்கு முயன்ற காதலியை தந்திரமாக காப்பாற்றிய காதலன்!

Written By NIsha on Tuesday, August 13, 2013 | 10:53 PM

காதலனுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தையடுத்து தற்கொலைக்கு முயன்ற பெண்ணொருவர் அவரது காதலனனின் சமயோசித புத்தியால் காப்பாற்றப்பட்ட சம்பவமொன்று சீனாவில் இடம்பெற்றுள்ளது. சீனாவின், ஹீலொங்ஜியாங் மாகாணத்தின் ஹார்பின் பகுதியில் இடம்பெற்ற மேற்படிச் சம்பவத்தில் 20 வயதான பெண்ணொருவரே தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

குறித்த பெண் அவர்கள் வசிக்கும் அடுக்கு மனைக் குடியிருப்பின்  ஜன்னலில் நின்று பாயப்போவதாக தெரிவித்துள்ளார்.

இதற்கு அடுத்தது நடக்கப்போவதை கணித்துக்கொண்ட காதலன் அவர்கள் வசிக்கும் வீட்டுக்கு கீழ் வீட்டுக்குச் சென்றுள்ளார். அங்குள்ள ஜனலினூடாக கீழே பாய்ந்த காதலியை லாவமாக காதலன் பிடித்துள்ளான்.

பின்னர் தீயணைப்பு வீரர்கள் மற்றும் அயலவர்களின் உதவியுடன் அப்பெண்ணை காப்பாற்றியுள்ளார். தற்போது இப்படங்கள் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : | |
Proudly powered by Kesavan
Copyright © 2014. Tamil News tamildiscovery Jaffna news Yarl news - All Rights Reserved
Original Design by Tamilcinema4u@hotmail.com