தலைவா ரிலீஸ் ஆகவில்லை விஜய் ரசிகர் தற்கொலை? விபரீத முடிவு! - Tamil News tamildiscovery Jaffna news Yarl news
Headlines News :
Home » » தலைவா ரிலீஸ் ஆகவில்லை விஜய் ரசிகர் தற்கொலை? விபரீத முடிவு!

தலைவா ரிலீஸ் ஆகவில்லை விஜய் ரசிகர் தற்கொலை? விபரீத முடிவு!

Written By NIsha on Saturday, August 10, 2013 | 3:58 AM

விஜய்யின் தலைவா படம் ரிலீஸாகாததால் அவரது ரசிகர் ஒருவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். கோவை மாவட்டம், காசிநஞ்சயகவுண்டன் புதூரை சேர்ந்த ஆனந்தன் மகன் விக்ரம் என்ற விஷ்ணுகுமார் (20). இவர் நடிகர் விஜய்யின் தீவிர ரசிகர்.

விஷ்ணு நேற்று நடிகர் விஜய் நடித்துள்ள தலைவா படத்தை பார்க்க ஆவலாய் இருந்துள்ளார். ஆனால் தலைவா படம் வெளியாகவில்லை. இதனால் விஷ்ணுகுமார் மிகவும் மனமுடைந்து காணப்பட்டார். நண்பர்களிடம் பேசிவிட்டு இரவு வீட்டுக்கு சென்ற விஷ்ணுகுமார் வீட்டில் யாரும் இல்லாத சமயம் பார்த்து தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதுப்பற்றி அவரது நண்பர்கள் மற்றும் உறவினரிடம் விசாரித்ததில் தலைவா படம் ரிலீஸாகாததால் விஷ்ணு மகிவும் கவலையுடன் இருந்தார். இதுப்பற்றி எங்களிடம் சொல்லி வருத்தப்பட்டார். அதனால்தான் அவர் தற்கொலை செய்து‌ கொண்டார் என தெரிவித்துள்ளனர்.

சம்பவம் குறித்து அறிந்த துடியலூர் போலீசார் விஷ்ணுவின் உடலை பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தலைவா படம் ரிலீஸாகாததால் ரசிகர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டது ‌கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது உண்மையெனில் இதைவிட பரிதாபமான சோகம் வேறு எந்த குடும்பத்திற்கும் நிகழக்கூடாது.

தலைவா படம் ரீலீஸாகவேண்டும் என்பதுதான் அனைத்து சினிமாத்துரையினர் மற்றும் ரசிகர்களின் விருப்பம். ஆனால் ஒரு வேளை அது ரிலீஸா ஆகாவிட்டாலும் கூட அது சம்பந்தப்பட்ட விஜய்க்கோ அல்லது தயாரிப்பாளருக்கோ வெறும் பணச்சேதமாகத்தான் இருந்திருக்கும். ஆனால் இங்கே ஒரு குடும்பத்திற்கு எந்தவித அவசியமும் இல்லாமல் ஒரு உயிர்ச்சேதம் ஏற்பட்டிருக்கிறது எனபது வார்த்தைகளால் விபரிக்க முடியாத பரிதாபத்தை ஏற்படுத்தும் துயரம். இப்படியும் முட்டாள்தனமாய் முடிவுகளை எடுக்கும் அளவுக்கு இந்த ரசிகர்களின் மனநிலை இருக்கிறது என்பது பெரும் கவலைதரும் விசயம்.

இது குறித்து படத்தின் டைரக்டர் AL விஜய் வருத்தம் தெரிவித்து உள்ளார், விரைவில் திரைப்படம் வெளியிட உறுதி அளிதுள்ளார்.

அவரது குடும்பத்தினருக்கு நமது நமது ஆழ்ந்த அனுதாபங்கள். இது போன்ற முட்டாள்தனங்கள் இனி தொடராமல் இருக்க வேண்டும் என வேண்டுவதை தவிர வேறொன்றும் சொல்வதற்கில்லை.

தலைவா விமர்சனம்.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : | |
Proudly powered by Kesavan
Copyright © 2014. Tamil News tamildiscovery Jaffna news Yarl news - All Rights Reserved
Original Design by Tamilcinema4u@hotmail.com