யாழில், நிர்வாண நிலையில் பெண்ணொருவரின் சடலம் மீட்பு! - Tamil News tamildiscovery Jaffna news Yarl news
Headlines News :
Home » » யாழில், நிர்வாண நிலையில் பெண்ணொருவரின் சடலம் மீட்பு!

யாழில், நிர்வாண நிலையில் பெண்ணொருவரின் சடலம் மீட்பு!

Written By NIsha on Tuesday, August 20, 2013 | 10:38 AM

யாழ், சாவகச்சேரியில் தனிமையில் வசித்து வந்த பெண்ணொருவர், உடலில் காயங்களுடன் நிர்வாண நிலையில் நேற்றுக் காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சாவகச்சேரி, கல்வயல் சண்முகானந்த வித்தியாலயத்துக்கு அருகில் வசித்து வந்த திருமணமாகாத பெண்ணான சிதம்பரப்பிள்ளை நந்தாயினி (வயது57) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த பெண் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், நேற்றுக்காலை குறித்த பெண் உடலில் சிறு காயங்களுடன் நிர்வாணக் கோலத்தில் சடலம் காணப்பட்டதாக அயலவர்கள் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக யாழ்போதனா வைத்தியசாலைக்குஅனுப்பி வைத்துள்ளனர். அத்துடன் இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : | |
Proudly powered by Kesavan
Copyright © 2014. Tamil News tamildiscovery Jaffna news Yarl news - All Rights Reserved
Original Design by Tamilcinema4u@hotmail.com