15 வயது மகளை வெறி கொண்டு கடித்துக் கொடுமைப்படுத்திய தந்தை! - Tamil News tamildiscovery Jaffna news Yarl news
Headlines News :
Home » » 15 வயது மகளை வெறி கொண்டு கடித்துக் கொடுமைப்படுத்திய தந்தை!

15 வயது மகளை வெறி கொண்டு கடித்துக் கொடுமைப்படுத்திய தந்தை!

Written By NIsha on Wednesday, September 4, 2013 | 10:05 AM

மும்பையில் தனது தந்தையால் அடித்து, கடித்து துன்புறுத்தபட்ட 15 வயது சிறுமி அவர் மேல் பொலிசில் புகார் அளித்துள்ளார்.

சிறுமியின் இந்த தைரியமான செயல் பலரது பாராட்டுகளையும் பெற்றுள்ளது. சம்பவத்தன்று இச்சிறுமியை தந்தை போதையில் அக்கம் பக்கத்தினரிடம் தகராறு செய்துள்ளார்.

பல நாட்களாக இந்த நபரின் அராஜகத்தை பொறுத்துக்கொண்ட மக்கள், கோபமடைந்து அவரை அடித்துள்ளனர். தனது தந்தை அத்துமீறி நடந்ததால் மக்கள் அவரை அடிக்கின்றனர் என தெரிந்துக்கொண்ட அச்சிறுமி அவரை காப்பாற்ற முயலாமல் வீட்டிற்குள் சென்றுவிட்டார்.

இதனால் ஆத்திரமடைந்த சிறுமியின் தந்தை தன்னை காப்பாற்றாத சிறுமியை மிக கொடூரமாக அடித்து துன்புறுத்தியுள்ளார். ஒரு கட்டத்தில் சோர்வடைந்த தந்தை, சிறுமியை ஆடையை கழித்து முதுகை கடித்து கொடுமைப்படுத்தியுள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுமி தனது தாயிடம் தனக்கு நேர்ந்த அவலத்தை தெரிவித்தப்போது, இதனை பெரிதுப்படுத்த வேண்டாமென அவரது தாய் கூறியுள்ளார்.

சமாதானம் அடையாத அச்சிறுமி முலுன்டு காவல் நிலையத்தில் தனது தந்தை மீது புகார் அளித்தார், சிறுமியின் புகாரை ஏற்றுக்கொண்ட பொலிசார் அவரை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தியப்போது அவரது முதுகில் பற்கள் பதிந்த காயங்கள் இருந்தன.

இதை தொடர்ந்து அச்சிறுமியின் 45 வயது தந்தையை பொலிசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : | |
Proudly powered by Kesavan
Copyright © 2014. Tamil News tamildiscovery Jaffna news Yarl news - All Rights Reserved
Original Design by Tamilcinema4u@hotmail.com