சிறுமியை தனிமையில் சந்தித்ததை ஒப்புக்கொண்ட அசாரம் பாபு! - Tamil News tamildiscovery Jaffna news Yarl news
Headlines News :
Home » » சிறுமியை தனிமையில் சந்தித்ததை ஒப்புக்கொண்ட அசாரம் பாபு!

சிறுமியை தனிமையில் சந்தித்ததை ஒப்புக்கொண்ட அசாரம் பாபு!

Written By NIsha on Wednesday, September 4, 2013 | 9:55 AM

இந்தியாவிக் ஜோத்பூரில் 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதற்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆன்மீகத் தலைவர் அசாரம் பாபு, ஒரு தாத்தா பேத்தியுடன் நேரம் செலவழிப்பது தப்பில்லையே என கூறியுள்ளார்.

அவரது ஆசரமத்தில் தங்கி படித்துவந்த 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில் அசாரம் பாபு கைது செய்யபட்டார்.

ராஜஸ்தான் நீதிமன்றம் அவரை செப்டம்பர் 15ம் திகதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டுருந்தது.

இந்நிலையில், அசாரம் பாபு தான் சிறுமியை தனிமையில் சந்தித்ததை ஒப்புக்கொண்டார். மேலும், தான் அப்பெண்ணுடன் தனிமையில் இருந்தது தாத்தா பேத்தியுடன் இருப்பதை போன்றதே என்று கூறியிருக்கிறார்.

முதலில் தனக்கு ஒரு பெண்ணை கெடுக்கும் அளவு ஆண்மை இல்லை என்று சொன்ன இவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் இவர் புணர்ச்சியில் ஈடுபடும் தகுதி உள்ளவர் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

அதை தொடர்ந்து தற்போது அசாரம் பாபு தான் சிறுமியை சந்தித்தது உண்மை என்றும் தாத்தா பேத்தியுடன் தனிமையில் இருப்பதை போன்றே தான் இருந்ததாகவும் தான் அச்சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தவில்லை என்றும் கூறியுள்ளார்.

பெண்களிடம் எச்சரிக்கையாக இருக்கவும்:


Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : | |
Proudly powered by Kesavan
Copyright © 2014. Tamil News tamildiscovery Jaffna news Yarl news - All Rights Reserved
Original Design by Tamilcinema4u@hotmail.com