மனநலம் குன்றிய பெண் லிப்டுக்குள் வைத்து பணியாளர்களால் வல்லுறவு! - Tamil News tamildiscovery Jaffna news Yarl news
Headlines News :
Home » » மனநலம் குன்றிய பெண் லிப்டுக்குள் வைத்து பணியாளர்களால் வல்லுறவு!

மனநலம் குன்றிய பெண் லிப்டுக்குள் வைத்து பணியாளர்களால் வல்லுறவு!

Written By NIsha on Monday, September 2, 2013 | 3:44 AM

இந்தியாவின் புனே போசாரி பகுதியில் உள்ள ஒரு வைத்தியசாலை லிப்டில், மனநலம் பாதிக்கப்பட்ட, பேசமுடியாத பெண் ஒருவர், வார்டு பணியாள் மற்றும் காவலாளியால் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தபட்டுள்ளார்.

கடந்த மாதம் 26ம் திகதி, காய்ச்சல் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சுமார் 30 வயது மதிக்கத்தக்க பெண்மணியே இந்த கொடுமைக்கு உள்ளாகியுள்ளார்.

வைத்தியசாலையின் லிப்ட் இயக்குனர் (ஆப்பரேட்டர்) உதவியோடு, குறித்த பெண்ணை வார்டு பணியாள் மற்றும் காவலாளி லிப்டில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதனால் அச்சமடைந்த அப்பெண், வைத்தியசாலையில் இருந்து வெளியேறி 5 நாட்கள் கழித்து தான், அவரது உறவினர் ஒருவரிடம் தனக்கு நேர்ந்த அவலத்தை தெரியப்படுத்தியிருக்கிறார்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் சார்பில் அளிக்கப்பட்ட புகாரை அடுத்து, வைத்தியசாலையின் வார்டு பணியாள், காவலாளி மற்றும் லிப்ட் இயக்குனர் ஆகியோரை பொலிசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : | |
Proudly powered by Kesavan
Copyright © 2014. Tamil News tamildiscovery Jaffna news Yarl news - All Rights Reserved
Original Design by Tamilcinema4u@hotmail.com