இந்திய சினிமா நூற்றாண்டு விழா பிரமாண்ட, கோலாக கொண்டாட்டம். - Tamil News tamildiscovery Jaffna news Yarl news
Headlines News :
Home » » இந்திய சினிமா நூற்றாண்டு விழா பிரமாண்ட, கோலாக கொண்டாட்டம்.

இந்திய சினிமா நூற்றாண்டு விழா பிரமாண்ட, கோலாக கொண்டாட்டம்.

Written By NIsha on Wednesday, September 18, 2013 | 3:55 AM

இந்திய சினிமா நூற்றாண்டு விழா வருகிற 21–ந் திகதி முதல் 24–ந் திகதி வரை சென்னையில் கொண்டாடப்படுகிறது. இவ்விழாவை முதல் அமைச்சர் ஜெயலலிதா துவக்கி வைக்கிறார். நிறைவு விழாவில் ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி பங்கேற்கிறார்.

நூற்றாண்டு விழாவையொட்டி 21–ந் திகதி மாலை 5.30 மணிக்கு தமிழ், நடிகர், நடிகைகள் கலை நிகழ்ச்சியும் 22–ந் திகதி காலை கன்னட நடிகர், நடிகையர் கலை நிகழ்ச்சியும் 22–ந் திகதி மாலை தெலுங்கு நடிகர், நடிகையர் கலை நிகழ்ச்சியும் 23–ந்தேதி காலை மலையாள சினிமா உலகினர் கலை நிகழ்ச்சியும் நடக்கின்றன.

நயன்தாரா, திரிஷா, ஸ்ரேயா, காஜல்அகர்வால், ஹன்சிகா, அனுஷ்கா, தமன்னா, சமந்தா உள்ளிட்ட முன்னணி நடிகைகள் நடனம் ஆடுகின்றனர்.

நூற்றாண்டு விழாவை யொட்டி சினிமா படப்பிடிப்புகள் நாளை முதல் 24–ந் திகதி வரை 7 நாட்கள் ரத்து செய்யப்படுகிறது. வெளியூர் படப்பிடிப்புகளில் இருக்கும் நடிகர் நடிகைகள் இன்று இரவே சென்னை திரும்புகிறார்கள்.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : | |
Proudly powered by Kesavan
Copyright © 2014. Tamil News tamildiscovery Jaffna news Yarl news - All Rights Reserved
Original Design by Tamilcinema4u@hotmail.com