ரஷ்யா அழகி மர்மக்கொலை: காட்டுக்குள் நிர்வாண நிலையில் சடலம் மீட்பு! - Tamil News tamildiscovery Jaffna news Yarl news
Headlines News :
Home » » ரஷ்யா அழகி மர்மக்கொலை: காட்டுக்குள் நிர்வாண நிலையில் சடலம் மீட்பு!

ரஷ்யா அழகி மர்மக்கொலை: காட்டுக்குள் நிர்வாண நிலையில் சடலம் மீட்பு!

Written By NIsha on Thursday, September 5, 2013 | 11:10 AM

ரஷ்யாவில் பிரபல மொடல் அழகி கடத்தப்பட்டு எரித்து படுகொலை செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யாவின் பிரபல மொடல் அழகி யூலியா லோஷாகினா(வயது 28), கணவர் திமித்ரி லோஷாகினா(வயது 37). இவர் புகைப்பட நிருபர். யூலியாவை பல்வேறு கோணங்களில் புகைப்படம் எடுத்த திமித்ரி, அவரது அழகில் மயங்கி காதலிக்க தொடங்கி விட்டார்.

இதனையடுத்து இருவரும் 2 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் கடந்த மாதம் 22ம் திகதி யூலியா திடீரென காணாமல் போனதால், பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அவரது உறவினர்கள் பொலிசில் புகார் தெரிவிக்கவே, தம்பி மைக்கேல் மற்றும் பொலிசார் யூலியாவை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில் அடர்ந்த காடுகள் அடங்கிய யூரல் மலை பகுதியில் யூலியாவின் சடலம் நிர்வாண நிலையில் மீட்கப்பட்டுள்ளது. இதனை கைப்பற்றிய பொலிசார், பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணயில், யூலியாவின் கழுத்து திருகப்பட்டு உடல் எரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. மேலும் இவர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு இருந்ததும் தெரியவந்துள்ளது.

இதனை தொடர்ந்து கணவர் திமித்ரியை கைது செய்த பொலிசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில், யூலியா மூலம் திமித்ரிக்கு எய்ட்ஸ் தொற்றி இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த திமித்ரி, யூலியாவை கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

ஆனால் திமித்ரியோ, அடிப்படை காரணம் இல்லாமல் என் மீது குற்றம் சுமத்துகின்றனர், நான் மனைவியை மிகவும் நேசிக்கிறேன், இந்த கொலைக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : | |
Proudly powered by Kesavan
Copyright © 2014. Tamil News tamildiscovery Jaffna news Yarl news - All Rights Reserved
Original Design by Tamilcinema4u@hotmail.com