அசர வைக்கும் அழகில் ஜொலிக்கப்போகும் 'ஜில்லா' விஜய்! jilla. - Tamil News tamildiscovery Jaffna news Yarl news
Headlines News :
Home » » அசர வைக்கும் அழகில் ஜொலிக்கப்போகும் 'ஜில்லா' விஜய்! jilla.

அசர வைக்கும் அழகில் ஜொலிக்கப்போகும் 'ஜில்லா' விஜய்! jilla.

Written By NIsha on Sunday, September 1, 2013 | 2:12 AM

ஜில்லா படத்தில் விஜய் மிகவும் அழகாக இருப்பாராம். ஆர்.பி. சௌத்ரி தயாரிப்பில் நேசன் இயக்கத்தில் விஜய், காஜல் அகர்வால் நடித்து வரும் படம் ஜில்லா.

தலைவா பிரச்சனைகளால் கவலையில் இருந்த விஜய் தற்போது தான் மகிழ்ச்சியாக காணப்படுகிறார். இந்நிலையில் ஜில்லா படம் வெற்றியடைய நடிகர் ஜீவா பழனி முருகன் கோவிலில் பிரார்த்தனை செய்துள்ளார்.

'ஜில்லா' திரைப்படம் விஜய்யை பொறுத்தவரை அவரது படங்களிலேயே ஸ்பெஷல் என்று கூறிவிடலாம். ஏனென்றால் இந்த படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலும் இருக்கிறார். பொதுவாகவே விஜய் நடிக்கிற படங்களில் அவருக்கு நிகரான அந்தஸ்துள்ள நடிகர்கள் யாரும் இருக்கப் போவதில்லை. அதனால் தான் உண்டு, தன் வேலை உண்டு சற்று தனிமையிலேயே இருந்து பழகி விடுவார் விஜய்.

இந்த முறை அப்படியல்ல. அமைதியான விஜய்யையே ஓவராக சிரிக்க வைத்தாராம் மோகன்லால். படப்பிடிப்பு ஒரே அரட்டையும் ஜாலியுமாக இருந்தது என்று சந்தோஷப்படுகிறார் விஜய். அவர் பெரிய நடிகர் என்று தெரியும். ஆனால் சிறந்த சமையல்காரர் என்பதை இப்போதுதான் தெரிந்து கொண்டேன் என்கிறார் விஜய். எப்படி? ஒருநாள் இவரை தன் வீட்டுக்கு அழைத்துப் போன மோகன்லால் தன் கையாலேயே ருசியான உணவை சமைத்து பரிமாறினாராம்

மதுரைக்காரனாக கெத்தாக வரும் விஜய்யின் ஜில்லா தற்போதே அவரது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக படத்தில் இருந்த அரசியல் பஞ்ச் வசனங்களை தயாரிப்பாளர் நீக்கிவிட்டார்.

மேலும் தன் படத்தில் அரசியல் பஞ்ச் வசனங்களோ, யாரையாவது தாக்கிப் பேசும் வசனங்களோ இருக்கவே கூடாது என்று அவர் கறாராக தெரிவித்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜில்லாவில் விஜய் நீங்கள் இதுவரை பார்த்திராத அளவுக்கு மிகவும் அழகாக இருப்பார் என்று கூறப்படுகிறது.

'ஜில்லா' ஹிட்டாக பழனி முருகனிடம் வேண்டிய ஜீவா.

ஜீவா தான் நடிக்கும் படங்களும், தனது தந்தை தயாரிக்கும் ஜில்லாவும் ஹிட்டாக பழனி முருகன் கோவிலில் பிரார்த்தனை செய்துள்ளார்.

ஜீவா யான் மற்றும் என்றென்றும் புன்னகை படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் தனது மனைவி சுப்ரியா மற்றும் மகன் ஸ்பர்ஷுடன் கொடைக்கானலுக்கு அண்மையில் சென்றார். கொடைக்கானலில் ரிலாக்ஸ் செய்த அவர் அப்படியே அங்கிருந்து பழனிக்கு சென்றார்.

பழனியில் உள்ள முருகன் கோவிலுக்கு சென்ற அவர் தான் நடிக்கும் படங்கள் ஹிட்டாக வேண்டும் என்று வேண்டிக் கொண்டார். மேலும் தனது தந்தை ஆர்.பி.சௌத்ரி தயாரிக்கும் விஜய்யின் ஜில்லா படமும் ஹிட்டாக பிரார்த்தனை செய்தார் ஜீவா. ஜீவா நல்லா வருவடா என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

இதில் அவருக்கு ஜோடியாக நஸ்ரியா நஸீம் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரூ 20 கோடி சம்பளம்:

ஜில்லா படத்தில் நடிக்க விஜய்க்கு ரூ 20 கோடிவரை சம்பளம் பேசப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

படத்துக்குப் படம் சம்பளத்தை உயர்த்துவதில் தமிழ் ஹீரோக்களுக்கு இணை கிடையாது. ரஜினி, கமல் போன்ற டாப் ஹீரோக்கள் தங்கள் நூறாவது படத்தில் கூட கோடி ரூபாய் சம்பளம் பெற்றதில்லை.

ஆனால் விஜய், அஜீத், சூர்யா, தனுஷ், சிம்பு, அட.. சிவகார்த்திகேயன் உள்பட பலருக்கும் கோடி ரூபாய் என்பது ஆரம்ப கட்ட படங்களிலேயே கிடைத்துவிட்டது. விஜய்யைப் பொறுத்தவரை, பூவே உனக்காக படம் வரை அவருக்கு பெரிய சம்பளம் என சொல்லிக் கொள்ளும்படி யாரும் தந்ததில்லை. ஆனால் காதலுக்கு மரியாதைக்குப் பிறகு அவரது சம்பளம் கிடுகிடுவென உயர்ந்துவிட்டது.

தலைவா படத்தில் விஜய்யின் சம்பளம் ரூ 18 கோடி என்றும், அதற்கு அடுத்த படமான ஜில்லாவில் அவருக்கு ரூ 20 கோடிக்கு மேல் பேசப்பட்டிருப்பதாகவும் கூறுகிறார்கள்.



Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : | |
Proudly powered by Kesavan
Copyright © 2014. Tamil News tamildiscovery Jaffna news Yarl news - All Rights Reserved
Original Design by Tamilcinema4u@hotmail.com