தலைவா, சிங்கம் 2 வை பின்தள்ளிய அஜீத்தின் ஆரம்பம்! - Tamil News tamildiscovery Jaffna news Yarl news
Headlines News :
Home » » தலைவா, சிங்கம் 2 வை பின்தள்ளிய அஜீத்தின் ஆரம்பம்!

தலைவா, சிங்கம் 2 வை பின்தள்ளிய அஜீத்தின் ஆரம்பம்!

Written By NIsha on Sunday, September 1, 2013 | 1:41 AM

கோவை, திருப்பூர், ஊட்டி மற்றும் ஈரோடு பகுதிகளுக்கான அஜீத்தின் ஆரம்பம் படத்தின் திரையரங்க உரிமையை காஸ்மோ பிக்சர்ஸ் நிறுவனம் பெரிய தொகைக்கு வாங்கியுள்ளதாம்.

அஜீத்தின் ஆரம்பம் படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய நாளில் இருந்து அது பற்றி ஏதாவது ஒரு செய்தி வந்து கொண்டு தான் இருக்கிறது.

அஜித், நயன்தாரா, ஆர்யா, டாப்ஸி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஆரம்பம்.’ விஷ்ணுவர்தன் இந்தப் படத்தை இயக்கி உள்ளார். ஏ.எம்.ரத்னம் தயாரிக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் அஜித்தின் திரையுலக பயணத்திலேயே ஆரம்பம் படத்தின் திரையரங்க உரிமை தான் அதிக விலைக்கு சென்றுள்ளதாம்.

கோவை, திருப்பூர், ஊட்டி மற்றும் ஈரோடு பகுதிகளுக்கான எந்திரன் பட திரையரங்க உரிமை தான் அதிக விலைக்கு சென்றுள்ளது.

அதையடுத்து தற்போது அஜீத்தின் படம் சென்றுள்ளது.

தலைவா, சிங்கம் 2 இந்த 4 பகுதிகளுக்கான தலைவா, சிங்கம் 2 ஆகிய படங்களின் திரையரங்க உரிமை கூட ஆரம்பம் அளவுக்கு செல்லவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் ஆரம்பம் படம் தீபாவளிக்கு வெளியாகாது, மாறாக தனியாக வெளியிட்டு வசூலை அள்ள எண்ணியுள்ளனர். டிரெய்லர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருப்பதால், படம் சூப்பர் ஹிட்டாகும் என்ற நம்பிக்கையில் இருக்கின்றனர்.
 ஆரம்பம் விமர்சனம்-ஆரம்பம் திரை விமர்சனம்.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : | |
Proudly powered by Kesavan
Copyright © 2014. Tamil News tamildiscovery Jaffna news Yarl news - All Rights Reserved
Original Design by Tamilcinema4u@hotmail.com