மனைவியை கழற்றிவிட்ட கூகுள் ஸ்தாபகர்: காரணம் புதிய இளம் காதலி! - Tamil News tamildiscovery Jaffna news Yarl news
Headlines News :
Home » » மனைவியை கழற்றிவிட்ட கூகுள் ஸ்தாபகர்: காரணம் புதிய இளம் காதலி!

மனைவியை கழற்றிவிட்ட கூகுள் ஸ்தாபகர்: காரணம் புதிய இளம் காதலி!

Written By NIsha on Sunday, September 1, 2013 | 1:29 AM

கூகுள் நிறுவனத்தின் ஸ்தாபகர்களில் ஒருவரான சேர்ஜி பிரின் தனது மனைவியை பிரிந்து வாழ்கின்றார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இப்பிரிவிற்கு காரணம் சேர்ஜி பிரினின் புதிய காதலி எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி சேர்ஜி பிரின் மற்றும் அவரது மனைவியான ஹேன் வொஜ்சிகீ ஆகிய இருவரினது 6 வருட திருமண வாழ்க்கை நிறைவுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தொழில்நுட்ப உலகில் தவிர்க்க முடியாத மனிதரான பிரின் கடந்த 2007 ஆம் ஆண்டு மேமாதம் ஹேன் வொஜ்சிகீயுடன் திருமண பந்தத்தில் இணைந்தார்.

இருவரினதும் தற்போதைய வயது 40, இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.

ஹேன் வொஜ்சிகீயும் தொழிநுட்ப உலகில் நன்கு அறியப்பட்ட ஒரு முயற்சியாளராக திகழ்கின்றார். இந்நிலையில் இவர்களது பிரிவு தொடர்பில் அவர்களது பேச்சாளரொருவர் கருத்து வெளியிட்டுள்ளார்.

அவர்கள் இருவரும் கடந்த பல மாதங்களாக பிரிந்து வாழ்வதாகவும், ஆனால் தற்போதும் நல்ல நண்பர்களாக இருந்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் பிரின் கூகுளில் பணிபுரியும் அமாண்டா ரொசன்பேர்க் என்ற 27 வயதான இளம் பெண்ணுடன் காதல் வயப்பட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. அமாண்டாவுடனான நெருக்கமே சேர்ஜி பிரின் தனது மனைவியை பிரிவதற்கான காரணமெனத் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை அமாண்டாவின் முன்னாள் காதலர் அவர் ஆண்களுடன் விளையாடுவதில் சிறந்தவர் எனத் தெரிவித்துள்ளார்.

போர்ப்ஸ் சஞ்சிகையின் அறிக்கையின் பிரகாரம் சேர்ஜி பிரினின் மொத்த மதிப்பு 24 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும். இவர் உலகின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் ஒருவராகவும் திகழ்கின்றார்.



Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : | |
Proudly powered by Kesavan
Copyright © 2014. Tamil News tamildiscovery Jaffna news Yarl news - All Rights Reserved
Original Design by Tamilcinema4u@hotmail.com